பாரதி கெட்டப் எல்லாம் போட்டுக்கிட்டு இப்படி தப்புத் தப்பா ட்வீட்டலாமா கமல்?

By Siva

சென்னை: பாரதியார் கெட்டப் எல்லாம் போடும் கமல் ஹாஸன் தமிழில் பிழையுடன் ட்வீட் செய்வது ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

தூய தமிழ், மெட்ராஸ் பாஷை என்று அசத்துவதில் கமல் ஹாஸனுக்கு நிகர் அவரே. ஆனால் ட்விட்டரில் தமிழில் அவர் ட்வீட்டும்போது எழுத்துப் பிழைகள் அதிகம் இருக்கிறது.

இது ஒரு முறை அல்ல பல முறை நடந்துள்ளது.

பிழை

தயாரிப்பாளர் அசோக் குமாரின் தற்கொலை குறித்து ட்வீட்டிய கமல் ஏழை விவசாயி என்பதை எழை விவசாயி என்று தவறாக தெரிவித்துள்ளார். அனைத்தும் தெரிந்து வைத்திருக்கும் கமல் இப்படியா தப்புத் தப்பாக ட்வீட்டுவது.

தமிழ்

தமிழ்

கமல் ஹாஸன் தமிழில் போடும் ட்வீட்டுகளின் அர்த்தம் புரியாமல் கோனார் உரை கேட்கிறார்கள் பலர். அந்த அளவுக்கு தமிழ் கற்று வைத்துள்ள உலக நாயகன் நினைத்தால் எழுத்துப் பிழையை தவிர்க்கலாமே.

சிரிப்பு

சிரிப்பு

பெருசா ட்வீட் போட வந்துட்டார் தமிழ் வாத்தியார். எழுத்துப் பிழைகளுடன் ட்வீட் போடுவதே இந்த மனிதருக்கு வேலையாகிவிட்டது என்ற கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறார் கமல். அரசியலை திருத்தலாம் கமல் முதலில் எழுத்துப் பிழைகளை திருத்திக் கொண்டால் இப்படி அனைவரின் கிண்டலுக்கு ஆளாக வேண்டியது இல்லை.

புகைப்படம்

புகைப்படம்

ட்விட்டரில் பாரதியார் கெட்டப்பில் புகைப்படம் எல்லாம் வைத்துவிட்டு இப்படி தப்புத் தப்பா ட்வீட்டினால் தமிழ்த் தாயும் கோபித்துக் கொள்வார் ஆண்டவரே என்கிறார்கள் ரசிகர்கள்.

ஏழை

எழை / ஏழை..ஏன் அதான் 280 இருக்கே ஏண்? இதுல பாரதி கனவு வேற இப்படி ஒருவர் கமல் ஹாஸனின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார். எழுத்துப் பிழையை தவிர்க்கலாமே உலக நாயகரே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X