twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயிலுக்கு போன கேப்டன்.. தலைமைகளை எச்சரித்த கமல்.. வீட்டதான் சொன்னேன் என்று கன்ஃபர்மேஷன் வேற!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் மீண்டும் அரசியல் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ் மேடையில் நடிகர் கமல் அரசியல் பேசுவது பிக்பாஸ் முதல் சீசன் முதலே நடைபெற்று வருகிறது.

    சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா சிறையில் இருந்தப்படியே ஷாப்பிங் சென்றது, இந்தி திணிப்பு, வேலையில்லா திண்டாட்டம், பேனர் விழுந்து இளம் பெண் உயிரிழந்தது என பல பிரச்சனைகளை பேசியிருக்கிறார்.

    பிக்பாஸ் மேடை

    பிக்பாஸ் மேடை

    இந்நிலையில் விரைவில் தமிழகம் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் பிக்பாஸ் மேடையை தனது அரசியலுக்கான மேடையாகவும் பயன்படுத்தி கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆட்சியாளர்கள் தேர்வு

    ஆட்சியாளர்கள் தேர்வு

    அதன்படியே கிடைக்கும் கேப்பில் எல்லாம் அரசியல் பேசி ரகளை செய்து வருகிறார் கமல். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் வீட்டில் கேப்டனுக்கான தேர்வு நடைபெற்றது. அப்போது ஆட்சியாளர்களை தேர்வு செய்யும் போது ரொம்ப கவனமாக தேர்வு செய்யுங்கள் என்ற அவர், இதை இரட்டை அர்த்தத்தில் தான் சொன்னேன் என்றார்.

    தேசிய அரசியல்

    தேசிய அரசியல்

    தொடர்ந்து, நாட்டின் தலைவர்கள் சிலரே கைப்பாவையாக இருந்துள்ளனர் என தேசிய அரசியலையும் பேசி மிரட்டினார். தீபாவளியின் போது வெடிக்க வேண்டிய இடத்தில் வெடிக்கணும், இனிக்க வேண்டிய இடத்தில் இனிக்கணும் என்றார்.

    கட்சியின் சின்னம்

    கட்சியின் சின்னம்

    வாக்குப்பதிவின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய கமல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சியான மக்கள் நீதி மையத்தின் சின்னம் பதித்த கோட்டை அணிந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நேற்றைய எபிசோடில்

    நேற்றைய எபிசோடில்

    நிவர் புயல், நீர் மேலாண்மை என எல்லாவற்றையும் பிக்பாஸ் மேடையில் பேசி வரும் கமல், நேற்றைய எபிசோடிலும் பட்டையை கிளப்பினார். பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கேப்டனாக இருந்த ரியோ, வொர்ஸ்ட் பர்ஃபாமர் என ஜெயிலுக்கு சென்றார்.

    Recommended Video

    பெண்களை மட்டும் Target செய்யும் Aari ? | Filmibeat Tamil
    தலைமைக்கு இது ஒரு பாடம்

    தலைமைக்கு இது ஒரு பாடம்

    இதுகுறித்து பேசிய கமல் இனி வரும் தலைமைக்கு இது ஒரு பாடம்.. தலைமையில் இருக்கும் போது ஜெயிலுக்கு செல்லக்கூடாது என்று கூறிய கமல் நான் வீட்டதான் சொல்கிறேன் என்று விளக்கம் வேறு கொடுத்தார். இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ் கைத்தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.

    English summary
    Kamal politics speech in Biggboss stage. Kamal said this is a lesson for the coming leadership. People who are in leader ship they should not go to jail.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X