வேலை இன்னும் முடியல... மேலும் தள்ளிப் போனது விஸ்வரூபம்!
சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் 2 படத்தின் ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதத்துக்கு தள்ளிப் போய்விட்டது.
'விஸ்வரூபம் 2' இந்த ஆண்டே வெளிவரும் என்றுதான் அறிவித்திருந்தார் கமல். பின்னர் ஜனவரி 26-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார்.
ஆனால், தொழில் நுட்பப் பணிகள் முடியாததால் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.

கோடையில்...
தற்போது ஏப்ரல் அல்லது மே 2014-ல் 'விஸ்வரூபம்2' படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பூஜா - ஆன்ட்ரியா
விஸ்வரூபம் முதல் பாகத்தில் இடம்பெற்ற நடிகர், நடிகைகள் மட்டுமன்றி, இரண்டாம் பாகத்தில் வேறு சில நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். பூஜா குமார் மற்றும் ஆன்ட்ரியா நாயகிகளாக நடித்துள்ளனர்.

ஆஸ்கர் பிலிம்ஸ்
'விஸ்வரூபம் 2' படத்தினை கமல் தயாரிக்கவில்லை, ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. 'விஸ்வரூபம்' படம் வெளியாகும் போதே தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்தவர் ரவிச்சந்திரன். இரண்டாம் பாகத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

சர்ச்சைகள்
அதுமட்டுமன்றி கமலும், முதல் பாகம் போன்று எந்த ஒரு சர்ச்சையிலும் இரண்டாம் பாகம் சிக்கி விடக்கூடாது என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு வெளியிடுகிறார்களாம். இஸ்லாமிய அமைப்புகளிடம் ஏற்கெனவே இது பற்றிப் பேசியிருக்கிறார்கள்.

ஆரோ 3 டி
'விஸ்வரூபம்' ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் சில தியேட்டர்களில் மட்டும்தான் வெளியிடப்பட்டது, 'விஸ்வரூபம்2' அனைத்து தியேட்டர்களிலும் ஆரோ 3டி தொழில்நுட்பத்தில் வெளியிட, கமல் முயற்சித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











