வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும்.. மன உறுதியுடன் இருந்தீர்கள்.. ஆரியை மனதார பாராட்டிய கமல்!
சென்னை: வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும் மன உறுதியுடன் இருந்தீர்கள் என்று ஆரியை மனதார பாராட்டினார் கமல்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க சக ஹவுஸ்மேட்ஸால் கட்டம் கட்டப்பட்டார் ஆரி.
அவரை எப்படியாவது கெட்டவராய் காட்ட வேண்டும் என தீயாய் வேலை செய்தார் பாலாஜி. பலமுறை ஆரியை ஒருமையில் பேசிய பாலாஜி, அவரை அடிக்கவும் பாய்ந்தார்.

நிதானத்தை இழந்துவிடுவாரோ?
இதனால் இந்த வாரம் முழுக்கவுமே ஒரு உதறலுடனே இருந்தது. பலமுறை எங்கு ஆரி, நிதானத்தை இழந்துவிடுவாரோ? பாலாஜி போட்ட திட்டப்படி விபரீதமாய் ஏதாவது நடந்து விடுமோ என்ற பீதியில் இருந்தனர் ரசிகர்கள்.

ஆரி இரும்பு மனிதர்
ஆனால், எந்த தருணத்திலும் தனது நிதானத்தை இழக்கவில்லை ஆரி. மன உறுதியுடன் இருந்தார். சமூக வலைதளங்களில் இதனை பார்த்த பல பிரபலங்கள், ஆரியை இரும்பு மனிதர் என பாராட்டினர்.

நடுநிலை சிதறாமல்
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஷிவானியை பாராட்டிய கமல், உங்களையும் பாராட்டியே ஆக வேண்டும் என ஆரியையும் பாராட்டினார். அதாவது, நடுநிலை சிதறாமல் மன உறுதியோடு இருந்தீர்கள் அதற்காக நிச்சயம் உங்களை பாராட்ட வேண்டும்.

உன்னிப்பா கவனியுங்க..
பல முறை வெடிச்சு சிதற வாய்ப்பு இருந்தும் அதை தவிர்க்க முயற்சி எடுத்தீங்க நல்ல விஷயம் என்றார். மேலும் நான் சொல்வது அட்வைஸ் அல்ல டிப் அல்ல. எடுத்துக்கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விருப்பம் உன்னிப்பா கவனியுங்க என்று ஆரியிடம் கூறினார் கமல்.

பலனை அதிகம் அனுபவிக்கலாம்
தொடர்ந்து பேசிய கமல், விமர்சனம் வைக்காதீங்கன்னு சொல்லல. தப்புன்னா தட்டிக் கேட்கணும். அது கனிவான முறையில் இருந்தால் நல்லாருக்கும். மரியாதையுடன் செய்தால் அதற்கான பலனை அதிகம் அனுபவிக்கலாம் என்றும் கூறி ஆரியை பாராட்டினார் கமல்.


Click it and Unblock the Notifications











