பாலாஜி மாறிவிட்டார்.. பழைய பாலாஜி இல்லை.. பாராட்டு பத்திரம் வாசித்த கமல்.. காண்டான ரசிகர்கள்!
சென்னை: பாலாஜி மாறிவிட்டார் அவர் பழைய பாலாஜி இல்லை என்று கமல் பாராட்டியதை கேட்ட ரசிகர்கள் செம காண்டாகியுள்ளனர்.
பிக்பாஸ் வீட்டில் பாலாஜி கடந்த வாரம் கேப்டனாக இருந்தார். இதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார்.
குறிப்பாக கிட்சன் டீம்மால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தார் பாலாஜி. அந்த வகையில் தனது நெருங்கிய தோழியான ஷிவானியுடனும் பிரச்சனை ஏற்பட்டது.

பால் ஊற்றும் போது பிரச்சனை
அதாவது கடந்த வாரம் ஷிவானி கிட்சன் டீம்மில் வாலண்டியராக அனைவருக்கும் பால் ஊற்றிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பாலாஜி, எல்லோருக்கும் வரும் அளவுக்கு பால் ஊற்றுங்கள் என்று கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

ஷிவானி பாலாஜி சண்டை
இதனைக் கேட்ட ஷிவானி, நான் வாலண்டியராகதான் செய்கிறேன் இதை என்னிடம் சொல்லாதீர்கள். இதற்கு யார் பொறுப்போ அவரிடம் சொல்லுங்கள் என்றார். இதனால் பாலாஜி கடுப்பானதால் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது.

ரேஷனிங் தெரிஞ்சுக்கணும்
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்தும் பேசினார் கமல். அப்போது பாலாஜியும் ஷிவானியும் நடந்ததை கூறினர். தொடர்ந்து பேசிய பாலாஜி, எல்லாரும் ரேஷனிங் தெரிஞ்சுக்கணும் என்றார். வாலண்டியரா இருந்தாலும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

பாலாஜி மாறிவிட்டார்
அப்போது பேசிய கமல், பாலாஜி செய்ததில் தவறில்லை. பாலாஜியின் கேப்டன்ஸி நல்ல கேப்டன்ஸிதான். தவறாக ஒன்றும் தெரியவில்லை. உணவு பொருளை வேஸ்ட் பண்ணக் கூடாது என்று கூறியது சரிதான் என்றார். மேலும், பாலாஜி மாறிவிட்டார் பழைய பாலாஜி இல்லை என்றார்.
Recommended Video

விளாசிய ரசிகர்கள்
தொடர்ந்து சரியான தலைமைக்கான பொறுப்புடன் இருந்தார் இருந்தார் என்றும் பாலாஜிக்கு பாராட்டு பத்திரம் வாசித்தார் கமல். இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் முழுவதுமாய் எபிசோடுகளை பார்க்கவில்லை என்பது நன்றாக தெரிகிறது. பார்த்திருந்தால் பாலாஜியை கழுவி ஊற்றியிருப்பீர்கள் என்று விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











