கால் டாஸ்க்கில் முதல் பாராட்டு.. ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க.. சோமை பாராட்டி பரிசு கொடுத்த கமல்!
சென்னை: கால் செண்டர் டாஸ்க்கில் சோம் மற்றும் கேபி இடையிலான உரையாடல் ஸ்வீட்டாக இருந்ததாக கமல் பாராட்டியுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கை வைத்துதான் இந்த வார இறுதி எபிசோடுக்களை ஓட்டினார் கமல்.
இந்த கால் செண்டர் டாஸ்க் அடுத்த வாரமும் தொடர உள்ள நிலையில், அதை மையப்படுத்தியே பேசினார் கமல்.

ஸ்வீட்டா செஞ்சு முடிச்சுட்டாங்க
அந்த வகையில் சோம் மற்றும் கேபி இடையிலான உரையாடலை குறிப்பிட்ட கமல், அவர்களின் அணுகுமுறை வித்தியாசமான அணுகுமுறை என்றார். மேலும் ஸ்வீட்டா செஞ்சு முடிச்சுட்டாங்க என்றும் பாராட்டினார் கமல்.

வச்சுட்டாங்க..
தொடர்ந்து பேசிய கமல் டூயட் போல ரெண்டு பேரும் சேர்ந்து பேசீனாங்க, வையுங்கன்னு சோம் சொன்னதும் டக்குன்னு கேபி வச்சுட்டாங்க என்றார். ஆனால் அந்த டாஸ்க்கின் போதே, கால் கட் பண்ணினால் நாமினேட் ஆவோம் என்று தெரிந்துதான் கட் பண்ணினேன் என்றார் கேபி.

சோம் சேவ்டு
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ரமேஷ் - ரம்யாக உரையாடல் குறித்து பேசிய பின்னரும் மீண்டும் சோமிடம் வந்த கமல், நீங்க ரொம்ப ஸ்வீட்டா பேசுனீங்க அதுக்காக நீங்க சேவ்டு என்றார். அதனை தொடர்ந்து நன்றி கூறிய சோம், கேபியை பிரேக் பண்ண வேண்டும் என்றுதான் நாய் மற்றும் டான்ஸ் குறித்து பேசினேன் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கேபியிடம் மன்னிப்பு கேட்டார்.
Recommended Video

சனம் ஷெட்டி சேவ்டு
இதனிடையே ரம்யாவின் கிட்சன் டீம் குற்றச்சாட்டுக்களின் போது சனம் ஷெட்டி அமைதியாக இருந்ததையும் கிண்டலடித்தார் கமல். இவ்வளவு பெரிய விவாதம் நடக்கிறது, இதில் சனம் ஷெட்டி கையை தூக்கவில்லையே. தூக்க வேண்டிய நேரத்தில் தூக்கமல் இருந்து விட்டீர்களே என்று கலாய்த்த கமல் அவரையும் சேவ்டு என்று அறிவித்தார்.


Click it and Unblock the Notifications











