சுமங்கலி விவகாரம்.. கைத்தட்டி பாராட்டிய கமல்.. கண்ணீர் வடித்து கைக்கூப்பி நன்றி சொன்ன அனிதா!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் சுமங்கலிகள் குறித்து பேசிய அனிதாவை நடிகர் கமல் கைத்தட்டி பாராட்டினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் எடுத்த எடுப்பிலேயே நடிகர் கமல்ஹாசன் சுரேஷ் சக்கரவர்த்தி தொடங்கி வைத்த சுமங்கலி விவகாரத்தை கையில் எடுத்தார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த திங்கள் கிழமை நவராத்திரி செலிபிரேஷன் நடைபெற்றது. அப்போது மங்களகரமாக இருக்க வேண்டும் என்று சுமங்கலி யாராவது வாருங்கள் என அழைத்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

சுமங்கலி போடும்மா

சுமங்கலி போடும்மா

அப்போது அனிதா அருகில் இருக்க நீ முதலில் போடும்மா என பானையில் தானியத்தை போட சொன்னார். அவரை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களின் கைகளால் அவற்றை அள்ளிப்போட்டனர்.

சுமங்கலியாக இல்லாவிட்டால்

சுமங்கலியாக இல்லாவிட்டால்

தொடர்ந்து நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது, அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அனிதா சம்பத் நான் சுமங்கலி என்பதால் தான் என்னை அழைத்தார்கள், நான் சுமங்கலியாக இல்லாவிட்டால் அழைத்திருக்க மாட்டார்களா என்றார்.

தேவையில்லாதது..

தேவையில்லாதது..

சுமங்கலிகள் ஒதுக்கப்பட கூடாது என்றும் அனிதா தனது சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கூறினார். ஆனால் இந்த பேச்சை அபத்தம் என்று நினைத்த சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா பேசியது தேவையில்லாதது என பலரிடமும் கூறினார்.

பெண் போட்டியாளர்களிடம்

பெண் போட்டியாளர்களிடம்

இந்நிலையில் இந்த பிரச்சனையை இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கையில் எடுத்தார் கமல். முதற்கட்டமாக அனிதா பேசியது குறித்து உங்களின் கருத்து என்ன என்று பெண் போட்டியாளர்களிடம் கேட்டார்.

அனிதா பேசியது சரிதான்

அனிதா பேசியது சரிதான்

அதற்கு அர்ச்சனா, நிஷா, ரம்யா மற்றும் கேபி ஆகியோர் அந்த இடத்தில் அது தேவையில்லாததோ என்று தோன்றியது என்றனர். ஆனால் சனம், சம்யுக்தா, ஷிவானி ஆகியோர் அனிதா பேசியது சரிதான் என்றனர்.

கைகளை தட்டி பாராட்டு

கைகளை தட்டி பாராட்டு


தொடர்ந்து பேசிய கமல் அனிதா நீங்க பேசுன பேச்சுக்கு செய்ய வேண்டிய காரியம் ஒரு கையில செய்ய வேண்டியது இல்ல இரண்டு கையில செய்யணும் என கைகளை தட்டி பாராட்டு தெரிவித்தார்.

எங்கேதான் பேசுவது?

எங்கேதான் பேசுவது?

அதற்கு கைகளை கூப்பி கண்ணீர் மல்க நன்றி சொன்னார் அனிதா. அப்போது ஏன் அழுகிறீர்கள் என்ற கமலிடம் குழப்பத்தில் இருந்தேன் சார் என அவரிடமும் அழுதார். தொடர்ந்து பேசிய கமல், எங்கதான் பேசுறது எப்போ பேசுறது என கேட்டார்.

அங்கீகாரம் எதிர்பார்க்காதீர்கள்

அங்கீகாரம் எதிர்பார்க்காதீர்கள்

மேலும் நீங்கள் ஒரு விஷயத்தை சரி என்று நினைத்தால் பேசுங்கள். அப்படி பேசிவிட்டால் அதற்கு அங்கீகாரம் எதிர்பார்க்காதீர்கள். இந்த விஷயத்துக்கு கதவை மூடிக்கொண்டு அழ வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X