மன்னிப்பு கேட்ட பாலா.. பாராட்டிய கமல்.. ஆனால் எவ்ளோ நாளைக்கு.. நரி முகம் தெரியுதே!
சென்னை: ஆரி மற்றும் ரியோவை ரொம்பவே ஹர்ட் பண்ணிட்டேன் என பாலா பேசியதற்கு கமல் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஆனால், அதற்கு முன்பு பாலா, ரம்யா மற்றும் ஆஜீத்துடன் ஏன் ஆரியை டார்கெட் பண்ணி அப்படி பேசினார் என்பது குறித்து கமல் ஏன் கேட்கவில்லை என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நரி, கோழி டாஸ்க்கில் அதிக பணத்தை சம்பாதித்த பாலாவுக்கு கிடைத்த ஸ்பெஷல் பவர் குறித்தும் பேசினார் கமல்.

ஏதாவது கோளாறா
இந்த சீசன் போட்டியாளரான பாலாவுக்கு ஏதாவது கோளாறா என்கிற கேள்வியை ஏகப்பட்ட ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். ஒரு நாள் ஒரு மாதிரியும், அடுத்த நாள் ஒரு மாதிரியும் மாற்றி மாற்றி பாலா பேசுவதை பார்த்து பலரும் அப்செட் ஆகி உள்ளனர். அதிலும், ஆரி விஷயத்தில் பாலாவின் சேஞ்ச் அதிகம் தெரிகிறது.

காலில் விழுந்து மன்னிப்பு
கையை நீட்டி பேசாதே என ஆரி முன்னதாக ஒரு சண்டையில் சொன்ன போது, எதை நீட்டி வேணா பேசுவேன் என பாலா வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொண்டார். அதன் பின்னர், ஆரி அண்ணா.. நான் சொன்னதுக்கெல்லாம் சாரி அண்ணா என ஆரியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். மறுபடியும் சண்டை போட்டார்.

ஹீரோவாகும் ஆசை
ஆரியும், ரியோ ராஜும் சினிமாவில் ஹீரோக்களாக இருக்கிறார்களே, இவங்கள விட நாம பெஸ்ட்டுன்னு நினைச்சிட்டு இருக்கிற பாலாவுக்கு ரியோவின் பிளான் பண்ணி பண்ணணும் படத்தின் வீடியோ பாடலை பார்த்ததும் ஹீரோவாகும் ஆசை அதிகமாகவே வந்து விட்டது. அதனை ஒட்டி ஹீரோக்களான ஆரியையும் ரியோவையும் புகழ்ந்து பேசி மன்னிப்புக் கேட்டார்.

கமல் பாராட்டு
வாரத்தின் தொடக்கத்தில் ஒரு மாதிரியும், கமல் நிகழ்ச்சிக்கு முன்பாக ஒரு மாதிரியும் நடித்து விட்டு, கமலிடம் எப்படி எளிமையாக பாராட்டுக்களை அள்ளி விடலாம் என்பதை பாலா நன்றாகாவே தெரிந்து வைத்துக் கொண்டு கேம் ஆடி வருவது பச்சையாக தெரிகிறது. பாலா திருந்தி மன்னிப்பு கேட்டது பாராட்டுக்குரிய விஷயம் என கமல் பாராட்டினார்.

நரி சாயம் வெளுக்குது
கமல் பாராட்டிய கையோடு மீண்டும் ஆரியிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார் பாலா. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரியிடம் போய் மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொள்வார் என்றே தெரிகிறது. அர்ச்சனாவை அதிரடியாக வெளியேற்றியதை போலவே ஏமாற்றி விளையாடும் பாலாவையும் வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











