நாமினேஷன் ரகசியத்தை சொல்லக் கூடாது.. அர்ச்சனாவுக்கு பாடம் நடத்திய பாலா.. பாராட்டிய கமல்!

சென்னை: நாமினேஷன் ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது என ரூல் புக்கில் தெளிவா இருக்கு என பேசி கமலிடம் பாராட்டுக்களை அள்ளி விட்டார் பாலா.

இந்த வாரம் என்னடா அநியாயத்துக்கு பாலா நல்லவனாக மாறிவிட்டாரே என ரசிகர்களும் வியக்க ஆரம்பித்து விட்டனர்.

நாள் நெருங்க நெருங்க, இன்னொரு கேம் பிளானை பாலா செயல்படுத்துகிறாரா என்கிற சந்தேகமும் எழத்தான் செய்கிறது.

புதுசா வந்தா

புதுசா வந்தா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புதுசா ஒரு விஷயத்தை கொண்டு வந்தாலே, அதில் இருப்பவர்கள் தான் அந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் இந்த வாரமும் அதே போல் தான் நடந்துள்ளது. அர்ச்சனா, ஆரி மற்றும் பாலா தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை நாமினேட் பண்ணதன் விளைவாகத் தான் இந்த வாரம் ஜித்தன் ரமேஷ் வெளியேறுகிறார்.

உளறிய அர்ச்சனா

உளறிய அர்ச்சனா

பாலா, அர்ச்சனா மற்றும் ஆரி உள்ளே போயிட்டு வெளியே வந்ததும் ஜித்தன் ரமேஷ், சோமசேகர் மற்றும் கேபி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். யார் யாரை நாமினேட் செய்தனர் என்கிற ரகசியத்தை வெளியே சொல்லக் கூடாது என்பது தெரிந்து அர்ச்சனா, தான் சோமை நாமினேட் செய்தேன் என்று உளறிக் கொட்டினார்.

பாடம் நடத்திய பாலா

பாடம் நடத்திய பாலா

ஜித்தன் ரமேஷுக்கு தன்னை ஆரி தான் நாமினேட் செய்தார் என்பது தெரியும் என்றார். கேபிக்கு, அப்போ என்னை பாலா தான் நாமினேட் செய்திருப்பான் என தெரிகிறது என்றார். உடனே பேசிய பாலா, நாமினேஷன் ரகசியத்தை சொல்லக் கூடாது என்பது ரூல் புக்கில் தெளிவாக இருக்கு என அர்ச்சனாவுக்கு மறைமுகமாக பாடம் நடத்தினார்.

பாராட்டிய கமல்

பாராட்டிய கமல்

பரவாயில்லையே, ரூல்ஸை எல்லாம் பாலாஜி முருகதாஸ் ஃபாலோ பண்ண ஆரம்பித்து விட்டாரே, நல்ல விஷயம் என கமல்ஹாசன் உடனடியாக பாலாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அர்ச்சனா அக்காவின் முகம் அப்படியே சுருங்கிப் போனது. தனது டீமை இன்னும் எத்தனை நாட்கள் தான் கட்டிக்காப்பாத்துவார் என்பதை பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X