பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க்.. எம்ஆர் ராதாவாக அனிதா பர்ஃபாமன்ஸ் ஜோர்.. பாராட்டி தள்ளிய கமல்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற பிளாக் அன்ட் வொய்ட் டாஸ்க்கில் அனிதாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டினார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க் மொத்தம் 45 மணி நேரம் நடைபெற்றது.
இந்த டாஸ்க்குக்கு இடையிடையே பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. ஜிப்ரிஷ் மொழியில் பேசுவது, சுண்டல் விற்பது, குல்ஃபி விற்பது, ரிவெர்ஸ் டாஸ்க், பிளாக் அன்ட் வொயிட் என பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.

பிளாக் அன்ட் வொய்ட்
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கேபி மற்றும் ஆஜித் ரிவெர்ஸ் டாஸ்க்கில் குழந்தை பருவத்திற்கு சென்றதை பாராட்டினார் கமல். மேலும் பிளாக் அன்ட் வொய்ட்டில் எம்ஜிஆராக ரியோ சிறப்பாக செய்தார் என்று கூறி, எம்ஜிஆர் உடனான அவரது எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்து கொண்டார்.

முகத்தில் கிழித்துவிட்டது
அதாவது சகலகலாவல்லவன் படத்தில் இளமை இதோ இதோ பாடல் செயினை கையில் சுற்றிக்கொண்டு வந்த போது கண்ணாடி உடைந்து முகத்தில் கிழித்து விட்டது. அதனை அறிந்து அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர் என்னை அழைத்து திட்டினார்.

நல்ல படம் இல்லையா
அப்போது என்ன படம் நடிக்கிறேன் என்று விசாரித்தார். நல்ல படம் பண்ணும் போது சொல்கிறேன் வந்து பாருங்கள் என்றேன். அப்போ இப்போ நடிக்கிறதெல்லாம் நல்ல படம் இல்லையா என்றார். அடுத்து பிரஸ்மீட்டில் எம்ஜிஆர் அழைத்தாரே என்ன பேசினார் என்று கேட்டனர்.

அதுல என்ன பெருமை?
அப்போது வாத்தியார் என்னை திட்டினார் என்றேன். அதனை கிசுகிசுவாக போட்டுவிட்டனர். அதை பார்த்த எம்ஜிஆர் என்னை அழைத்து மீண்டும் திட்டினார். நான் திட்டினேன் என்பதில் உனக்கு என்ன பெருமை. நான் உன்னை அழைத்து பேசுகிறேன் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டுமா? அதான் ஏற்கனவே தெரியுமே என்றார் என கூறி தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

எம்ஆர் ராதாவுடன் எக்ஸ்பீரியன்ஸ்
தொடர்ந்து பேசிய கமல், பிளாக் அன்ட் வொயிட் டாஸ்க்கில் ஆரியும் அனிதா சம்பத்தும் சேர்ந்து அசத்தல் பர்ஃபாமன்ஸ் கொடுத்தாங்க. குறிப்பாக அனிதா சம்பத் எம்ஆர் ராதாவாக பட்டைய கிளப்பினார். அவரது பர்ஃபாமன்ஸை ஜோர் என பாராட்டினார் என கமல். மேலும் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர் ராதா இடையே ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











