twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்கள் கோயில்களை போல.. ஒடிடி தளம் சாமி படம் போட்ட காலண்டர் போல.. ஜெயம் ரவிக்கு கமல் அட்வைஸ்!

    |

    சென்னை: தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையிலும் ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் வரும் பொங்கலுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

    பூமி படத்தின் டிரைலரை பார்த்து ரசித்த கமல்ஹாசன், தியேட்டர்கள் பற்றியும் ஒடிடி தளங்கள் பற்றியும் பேசியது சமூக வலைதளத்தில் பேசு பொருளாகி உள்ளது.

    வெளியே இருந்து உங்களை வேற மாதிரி பார்க்கிறோம்.. தீவிர பிக் பாஸ் ஃபேன் நான்.. ஜெயம் ரவி செம!வெளியே இருந்து உங்களை வேற மாதிரி பார்க்கிறோம்.. தீவிர பிக் பாஸ் ஃபேன் நான்.. ஜெயம் ரவி செம!

    பொங்கலுக்கு பூமி

    பொங்கலுக்கு பூமி

    தீபாவளிக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் வெளியாகி அதிகளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயம் ரவியின் பூமி திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக காத்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த படத்தின் டிரைலர் வெளியானது.

    அன்னமிட்ட கை

    அன்னமிட்ட கை

    பூமி படத்தின் டிரைலரை பார்த்து விட்டு ஹவுஸ்மேட்கள் ஜெயம் ரவிக்கு ராயல் சல்யூட் அடித்தனர். கமல்ஹாசன் பார்த்து விட்டு, விவசாயத்தை கையில் எடுத்துக் கொண்டு படம் பண்ணியதற்கு பாராட்டுக்கள் என்றார். மேலும், அந்த அன்னமிட்ட கை இல்லை என்றால் நாம யாரும் இல்லை. இதை பலரும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர் என்றார்.

    ஊறுகாய் போல அல்ல

    ஊறுகாய் போல அல்ல

    கமல் சார் பாராட்டியதும் பூரித்துப் போன ஜெயம் ரவி, விவசாயத்தை ஊறுகாய் போல இந்த படத்தில் தொடவில்லை. இந்த படம் முழுவதுமே விவசாயத்தை பற்றித் தான் இருக்கும் சார் என பூமி படத்தின் மையக் கரு குறித்து கமலுக்கு விளக்கினார் ஜெயம் ரவி.

    தியேட்டர்கள் கோயில் ஓடிடி காலண்டர்

    தியேட்டர்கள் கோயில் ஓடிடி காலண்டர்

    பூமி படத்தின் டிரைலர் குறித்து பாராட்டிய கமல், என்ன இருந்தாலும், தியேட்டர்கள் படியேறி மலையேறி போய் கும்பிடும் கோயில் போல எப்போதுமே இருக்க வேண்டியது அவசியம். ஒடிடி தளங்கள் என்னை பொறுத்தவரைக்கும் வீட்டில் மாட்டி இருக்கும் சாமி காலண்டர் போலத் தான் என ஜெயம் ரவிக்கு புரியும் படி அட்வைஸ் பண்ண கமலை பல தியேட்டர் உரிமையாளர்கள் பாராட்டி வருகின்றனர்.

    Recommended Video

    96 என்னோட LIFE STORY தான் |BALAJI THARANEETHARAN & C.PREM KUMAR CHAT PART - 01 | FILMIBEAT TAMIL
    ஏன் ஒடிடியில்

    ஏன் ஒடிடியில்

    தீபாவளிக்கே தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையிலும், ஜெயம் ரவி போன்ற பெரிய ஹீரோக்கள் ஏன் இன்னமும் ஒடிடி தளத்தை நாடுகிறார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே உள்ளது. பொங்கலுக்கு ஈஸ்வரன், மாஸ்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில், பூமி படத்தையும் தியேட்டரில் வெளியிட்டு இருக்கலாமே என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    English summary
    Kamal praises Theaters are like Temples and OTT platforms are like god photo holded Calendar. He also advise to Jayam Ravi for prefer Theater release in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X