Kamal: ”வேட்டையாடு விளையாடு 2 ‘அந்த’ மாதிரி இருக்கும்..” கமல் ஓக்கே சொன்னா வேறலெவல் தான்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள் H வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்த வரிசையில் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் உருவாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், 2ம் பாகம் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

 Kamal: Producer Manickam Narayanan gave an update for Kamals Vettaiyaadu Vilaiyaadu 2

வேட்டையாடு விளையாடு 2 அப்டேட்: கமல்ஹாசன் நடிப்பில் கடந்தாண்டு ரிலீஸான விக்ரம் திரைப்படம் கோலிவுட்டின் இன்டஸ்ட்ரி ஹிட்டாக அமைந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விக்ரம் வெற்றியால் உற்சாகமான கமல், இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாகிவிட்டார். அதோடு H வினோத், மணிரத்னம் இயக்கத்திலும் படங்கள் நடிக்கவும் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில், சிம்புவின் வெந்து தணிந்தது காடு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல், வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் குறித்து இயக்குநர் கெளதம் மேனனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கெளதம், விரைவில் ஸ்கிரிப்ட் உடன் சந்திப்பதாக கமலிடம் உறுதியாக தெரிவித்தார். அப்போது முதல் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் பற்றிய அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.

இதனிடையே வேட்டையாடு விளையாடு படத்தை ரீ-ரிலீஸ் செய்த படக்குழு, ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பைப் பார்த்து மிரண்டுவிட்டது. இதனால், மீண்டும் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் குறித்த அப்டேட் செய்திகள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இதுபற்றி வேட்டையாடு விளையாடு தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் விரிவாக பேசியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது வேட்டையாடு விளையாடு 2ம் பாகத்திற்கான கதை இன்னும் முழுமையாகவில்லை. கெளதம் மேனன் பாதி ஸ்க்ரிப்ட் தான் எழுதியுள்ளார் என கூறியுள்ளார். இதுபற்றி கமல் சரிடம் கேட்டபோது, கையில் சில ப்ராஜெக்ட்கள் இருப்பதால், இப்போதைக்கு வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் குறித்து முடிவெடுக்கவில்லை என்றாராம். ஆனால், ரசிகர்களுக்காக கண்டிப்பாக அதில் நடிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

அதேநேரம் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் ஹாலிவுட் சீரிஸ் மாதிரி இருக்கும் எனவும், அதுமட்டும் வெளியானால் கமல் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். வேட்டையாடு விளையாடு கமலின் கையில் தான் இருப்பதாகவும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். அதேநேரம் அவரும் அந்தப் படத்தை அதிகம் எதிர்பார்த்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X