இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியேதான் உள்ளது - ரஜினி பற்றி கமல்

By Shankar

சென்னை: இடைத்தரகர்கள் பலர் இருந்தும் எனக்கும் ரஜினிக்குமான நட்பில் மாற்றமில்லை. அப்படியேதான் இருக்கிறது, என்றார் நடிகர் கமல்ஹாஸன்.

இன்று காலை நடந்த 16 வயதினிலே டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கமல் ஹாசன் பங்கேற்று பேசியது:

16 வயதினிலே அப்போது பெரிய வெற்றி படமாக அமைந்தது. 36 வருடங்கள் கழித்து அந்த படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய இங்கே விழா எடுக்கப்படுகிறது. 16 வயதினிலே அற்புதமான படம். அதில் நடித்த எல்லோரும் சிறப்பாக நடித்து இருந்தார்கள். அதை மீண்டும் நினைவூட்டுவது போல் இவ்விழா இருக்கிறது. இந்த படத்தில் இருந்த எல்லோருமே வெற்றி கண்டு இருக்கிறார்கள். இளையராஜா இசை சிறப்பாக இருந்தது.

கதாநாயகி மயிலுவாக நடித்த ஸ்ரீதேவி அருமையாக நடித்திருந்தார். நவீன தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே இந்தப் படத்தில் 'ஸ்லோ மோஷன்' காட்சியை எடுக்க முயன்றார் பாரதிராஜா. தன்னிடமிருந்த பணம் முழுவதையும் கொட்டி தயாரிப்பாளர் இந்தப் படத்தை எடுத்தார்.

பாரதிராஜாதான் நாயகன்

பாரதிராஜாதான் நாயகன்

இப்படத்தின் முதல் நாயகன் பாரதிராஜாதான். படம் எடுத்தபோது சிலர் எதிர்மறை கருத்துக்கள் சொன்னார்கள். தயாரிப்பாளர் நிலையை நினைத்து பயந்தேன். ஆனால் படம் வெற்றி பெற்றது. அதை மீண்டும் ரிலீஸ் செய்ய நடக்கும் இது போன்ற விழா அரிதான ஒன்று.

சில்லறைத்தனமான கேள்வி

சில்லறைத்தனமான கேள்வி

இந்தப் படம் வெற்றி பெற்று நூறு நாட்களைத் தாண்டியபோது பாரதிராஜாவிடம் சில்லறைத்தனமாக ஒரு கேள்வி கேட்டேன். ஏன் நூறாவது நாள் விழா எடுக்கவில்லை என்று. 36 வருடங்கள் கழிந்த பிறகும் இந்தப் படத்துக்கு இதுபோன்ற சிறப்பான விழா எடுப்பார்கள், அந்த அளவு சிறப்பான படமாக இது அமையும் என்று தெரியாமல் கேட்ட கேள்வி அது.

ரஜினி படங்கள்

ரஜினி படங்கள்

ரஜினி பற்றிச் சொல்ல வேண்டும். இன்று அவரது நினைத்தாலே இனிக்கும் படம் வெளியாகியுள்ளது. இதே நாளில் அடுத்த படத்துக்கான ட்ரைலர் வெளியீடு. அன்றைக்கு எங்கள் படங்கள் இப்படித்தான் வெளியாகின. ஒரு பக்கம் எங்கள் படத்தின் வெள்ளி விழா நடந்து கொண்டிருக்கும். இன்னொரு பக்கம் புதுப்படத்தின் பூஜை நடக்கும்.

வயது காரணமல்ல

வயது காரணமல்ல

துவக்கத்தில் நானும் ரஜினியும் நிறைய படங்களில் ஒன்றாக நடித்தோம். பின்னர் இடைவெளி அதிகமாகிவிட்டது. நிச்சயம் வயது காரணமல்ல... முதலீடு அதிகமாகிவிட்டதுதான்.

ரஜினி எப்போதும் மாறாதவர்

ரஜினி எப்போதும் மாறாதவர்

இந்த 16 வயதினிலே நடித்தபோது ரஜினி எங்கு தங்கினார் என்று நிஜமாகவே எனக்கும் தெரியாது. ஒரு படம் முடிந்ததும் அவர் வேறு படத்துக்கு போக வண்டி வரும். வண்டியிலேதான் தங்கினாரா என்று நினைக்க தோன்றியது. 16 வயதினிலே படத்தில் நடித்தபோது எங்களுக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம் கிடைத்தது. அப்போது ரஜினி எப்படி இருந்தாரோ அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.

இடைத்தரகர்களைத் தாண்டி

இடைத்தரகர்களைத் தாண்டி

இடைத் தரகர்கள் பலர் இருந்தும் எங்கள் நட்பு அப்படியே இருக்கிறது. இதற்கான பெருமை எங்கள் இருவரையும்தான் சாரும். நான் உங்களுக்கு செய்த நட்பு நீங்கள் செய்த அன்பின் பலன். இவ்விடமும் அதேதான்.

இளையராஜா இருந்திருந்தால்...

இளையராஜா இருந்திருந்தால்...

இந்த விழாவில் இளையராஜாவும் ஸ்ரீதேவியும் பங்கேற்று இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும். அவர்கள் சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம். எனக்கு நல்ல நண்பர்களும் ரசிகர்களும் இருக்கிறார்கள்," என்றார் கமல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X