பாலா அர்ச்சனா சேர்ந்தது எனக்கு பிடிக்கல.. ஓப்பன் பண்ண ரியோ.. கிளறிவிட்ட கமல்.. விரைவில் வெடிக்கும்!
சென்னை: அர்ச்சனாவிடம் பாலா எகிறும் போதெல்லாம் எதிர்த்து நின்று குரல் கொடுத்த ரியோவுக்கு கல்தா கொடுத்து விட்டு பாலாவை தன் பக்கம் ஈர்த்த அர்ச்சனாவின் செயல் ரியோவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பதை கமல் கிளற அவரும் ஒத்துக் கொண்டார்.
ரியோ, நிஷா என விஜய் டிவி புராடக்ட்ஸ் உருவாக்கிய குரூப்பிற்கு, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக தலைவி ஆகி விட்டார் அர்ச்சனா.
நடிகை ரேகா பாசத்தை மட்டுமே காட்டினார். ஆனால், அதை வைத்து அர்ச்சனா கேம் ஆடுகிறாரோ என்கிற சந்தேகம் கமலுக்கும் வந்து விட்டது.

எலியும் பூனையுமாக
அர்ச்சனா அக்கா வீட்டில் ஓவர் ஆக்டிங் பண்ணி விட்டு அடியெடுத்து வைத்த உடனே தலைவலி வந்துடுச்சு என பாலாஜி முருகதாஸ் பேசியதை கேட்ட அர்ச்சனா, அப்போது இருந்தே பாலாஜியும் டார்கெட் பண்ண ஆரம்பித்தார். அவரை குழந்தை குழந்தை எனக் கூறியே ஈகோவை டச் பண்ணி விளையாட ஆரம்பித்தார். எலியும் பூனையுமாக இருவரும் சண்டைப் போட்டுக் கொண்டனர்.

யாரோட கேம்
என்னை ஏன் டா எதிர்க்கிற, என் கட்சி பெருசு டா, நிச்சயம் நாமதான் ஜெயிப்போம். நீ தலைவனாகிக்க, இந்த ரியோ, நிஷா கிட்டலாம் சும்மா ஃபேக்காத்தான் பேசிட்டு இருக்கேன். என பாலாவுக்கு நல்ல டீலிங் பேசிய நிலையில், அவரும் தனது கேமை இந்த வீட்டில் கடைசி வரைக்கும் கொண்டு செல்ல, அர்ச்சனாவின் ஆதரவு தேவை என அவரது அணியில் சேர்ந்து விட்டார். இருவர் மனதிலும் சூப்பர் கேம் ஒன்று நடந்து கொண்டிருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்த நிலையில், அதைப்பற்றி கமலும் பேசிவிட்டார்.

மூஞ்சி மாறுது
கமல் சார் கேட்டவுடனே மறுபடியும் பாலா, அர்ச்சனா பண்ண இம்சைகளை எடுத்து சொல்ல சொல்ல, அர்ச்சனா மம்மியின் ஃபேஸ் அப்படியே டல்லடித்து விட்டது. மறுபடியும் பாலாவை கரெக்ட் பண்ணும் விதமாக, அவருக்கு இந்த பாசம் கிடைத்தது இல்லை என்றார் என மீண்டும் ஒரு கொக்கியை இப்போதைக்கு போட்டு வைத்திருக்கிறார்.

நடுவில் நான் தானே ஆடு
வேங்கை ஒரு பக்கம் சிங்கம் மறுபக்கம் நடுவில் நான் தானே ஆடு என்பது போல இவங்க ரெண்டு பேரும் சண்டைக்கு நடுவே சிக்கிக் கொண்ட ஆடாக திருட்டு முழி முழித்த ரியோவிடம் நீங்க என்ன நினைக்கிறீங்க என கமல் கிளறிவிட அவரும் கொஞ்சம் சூடாகி, தனது கருத்துக்களை வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.

பிடிக்கவில்லை
அப்படி சண்டை போட்டுக்கிட்டாங்க, அர்ச்சனாவை வைத்து பாலாவை வெளியேற்றி விடலாம் என நான் போட்ட கணக்கை அர்ச்சனா புரிந்து கொண்டு, பாலாவை வைத்து என்னை வெளியேற்ற பார்க்கிறார்கள் என்பது போல ரியோ ராஜ் பேச ஆரம்பித்தார். ஆமாம் சார், என்னை கூப்பிட்டாங்க, எனக்கு அது பிடிக்கலை, அதனால் அந்த பிரச்சனையில தலையிட விரும்பலை, திடீர்னு ரெண்டு பேரும் சேர்ந்தது எனக்கு ஷாக்கிங்கா இருந்தது என ஓப்பனாக சொன்னார்.

விரைவில் வெடிக்கும்
ரியோ ராஜுக்கு கடைசி வரை உண்மையாக இருக்கப் போவது நிஷா அக்கா மட்டும் தான் என தெரிகிறது. இடையில் வரும் அக்காக்கள் எல்லாம் சரியான கேம் பிளானோடு வந்து, நான் வெளியே போறேன், நான் வெளியே போறேன்னு ஒப்பாரி வைப்பதை எல்லாம் பார்த்து ஏமாந்து விடாதீங்க ரியோ, உங்க கேமை நீங்க ஆடுங்க!


Click it and Unblock the Notifications











