டபுள் எவிக்ஷன்.. நிஷாவை ஜெயிலில் தள்ளிய கமல்.. சோமுக்கு ஸ்டோர் ரூம்.. ரமேஷுக்கு கன்ஃபெஷன் ரூம்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது அதிரடியான டபுள் எவிக்‌ஷன் புரமோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

அனிதா சம்பத்தின் வாக்குவாதம் வீண் போகவில்லை. நிஷாவை போரிங் போட்டியாளர் என கமல் ஜெயிலுக்குள் தள்ளிவிட்டார்.

சோமசேகரை ஸ்டோர் ரூமுக்குள்ளும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமுக்குள்ளும் அனுப்பி விட்டு அர்ச்சனா கேங்கை ஒட்டுமொத்தமாக ஆட்டம் காண வைத்துள்ளார்.

அப்பாடா ஒருவழியா

அப்பாடா ஒருவழியா

ரொம்ப நாளா ஹவுஸ் ஃபுல்லாக வைத்துக் கொண்டு இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனை ஓட்டி வருகின்றனர் என்கிற குற்றச்சாட்டை போக்கும் விதமாக ஒரு வழியாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் அஸ்திரத்தை கமல்ஹாசன் எடுத்துள்ளார். ஏகப்பட்ட மிக்சர் தின்னிகளை இந்த ஆண்டு இறக்கி எப்படியோ 70 நாட்களை ஓட்டி விட்டனர். அடுத்த வாரமும் டபுள் எவிக்‌ஷன் வச்சிருங்க ஆண்டவரே!

3வது புரமோ

3வது புரமோ

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோவில் போரிங் போட்டியாளர் பஞ்சாயத்தை கமல் கையில் எடுத்துள்ளார். அனிதா சம்பத் கண்ணாடி சிறையில் அடைக்கப்பட்ட போது, ரியோவையும், அர்ச்சனாவையும் கேள்விகளால் துளைத்து எடுத்த நிலையில், கமல் மீண்டும் போரிங் போட்டியாளரை தேர்வு செய்ய சொன்னார்.

சிறைக்குள் நிஷா

சிறைக்குள் நிஷா

ஆரி உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் நிஷாவை போரிங் போட்டியாளர் என தேர்வு செய்ய, போரிங் போட்டியாளருக்கு கிடைத்த தண்டனை இவருக்கும் கிடைக்க வேண்டாமா? எனக் கேள்வி எழுப்பி நிஷாவை கண்ணாடி சிறைக்குள் அடைக்க சொல்கிறார். நிஷாவை இப்படியே இந்த வாரம் காப்பாற்றி விடுவாரோ கமல் என்கிற அச்சமும் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன.

ஸ்டோர் ரூமில் சோம்

ஸ்டோர் ரூமில் சோம்

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கு என சொன்ன கமல்ஹாசன், சோமசேகரை கூப்பிட்டு ஸ்டோர் ரூமுக்குப் போய் வெயிட் பண்ணுங்க என சொன்னதும், சோமசேகர் தான் இந்த வாரம் வெளியேறப் போகிறாரோ என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

கன்ஃபஷன் ரூமில் ரமேஷ்

கன்ஃபஷன் ரூமில் ரமேஷ்

சோமசேகரை ஸ்டோர் ரூமில் காத்து நிற்க சொன்ன கமல், ஜித்தன் ரமேஷை கன்ஃபஷன் ரூமில் போய் வெயிட் பண்ணுங்க என்றார். அதன் பின்னர் ஹவுஸ்மேட்களிடம் பேசிய கமல், இந்த இருவரில் ஒருவர் இன்னும் சற்று நேரத்தில் என்னுடன் வந்து பேசுவார் என அதிரடியாக அறிவித்து விட்டார்.

இன்னொருவர் யார்

இன்னொருவர் யார்

ஏற்கனவே ஜித்தன் ரமேஷ் தான் வெளியேற்றம் என்பது வழக்கம் போல லீக் ஆகிவிட்டது. இந்நிலையில், நாளை சோமசேகர் வெளியேற்றப்படுவாரா? அல்லது ஜித்தன் ரமேஷ் அவுட் ஆவதால் அவர் சேவ் செய்யப்படுவாரா என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். நிஷாவை நாளைக்கு சேவ் பண்ணி விட்டால், கேபி வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பார்க்கலாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X