நேர்மையாக விளையாடுகிறார்களா.. உங்கள் தேர்வின் சாயல் தெரிய ஆரம்பித்துவிட்டது.. அதிரடி காட்டும் கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சயில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்து வருவது வாடிக்கையான ஒன்று.
அந்த வகையில் இன்றும் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கிறார் என்பது இன்றறைய முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

இன்னும் 31 நாட்கள்
இதில் வொய்ட் அன்ட் ஆஷ் கலர் கோட் சூட்டில் டக்கராய் வந்துள்ளார் கமல். தொடர்ந்து பேசும் கமல் இன்னும் 31 நாட்களே இருக்கின்றன ஒரு வெற்றியாளரை நீங்கள் தேர்ந்தெடுக்க என்று கூறுகிறார்.

நேர்மையாக விளையாடுகிறார்களா?
தொடர்ந்து பேசும் கமல், இந்த வீட்டின் உள்ளே போட்டியாளர்கள் விளையாட்டுக்களை நேர்மையாக விளையாடுகிறார்களா என்பதை உங்கள் பிரதிநிதியாக நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் கமல்.

எப்படி மாற்றப்போகிறது?
மேலும் உங்கள் தேர்வின் சாயல்கள் இந்த வாரம் முதலே தெரிய ஆரம்பித்துவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. உங்கள் ஓட்டு இந்த வீட்டை எப்படி மாற்றப் போகிறது என்பதை பார்க்கலாம் என்றும் பொடி வைத்துள்ளார் கமல்.

கட்டம் கட்டப்பட்ட ஆரி
கமல் பேசியதை வைத்து பார்க்கும் போது இந்த வாரம், லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது ஆரி அன்ஃபேராக விளையாடியதாக அனிதா, அர்ச்சனா மற்றும் ரம்யா ஆகியோர் கட்டம் கட்டினர். இந்த பிரச்சனையை கையிலெடுப்பாரா கமல் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











