திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்கவுள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயிண்ட்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.

kamal rahman sivakarthikeyan

இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது.

பழம்பெரும் ஆளுமைமிக்க நடிகர்கள் உட்பட, கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள் என கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வில், உலகநாயகன் கமல்ஹாசன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது திறமையான மகன் ஏ.ஆர்.அமீன், அதே போல் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிவகார்த்திகேயன், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணையவுள்ளார்கள். இவர்களுடன் உள்ளூர் மலேசியப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

உலகின் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான பேஷன் மேஸ்ட்ரோக்கள் - மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி வடிவமைத்த புதுவிதமான ஆடை அணிகலன்களை, மணமகனும், மணமகளும் அணிய இருக்கிறார்கள்.

இவருடன் இணையும் பிரபல ஆர்.ஜே. பிராவோ, வாழ்க்கை முறை மற்றும் பயண வீடியோக்களுக்காக கொண்டாடப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் சிந்துஜா ஹரி, மற்றும் சமூக வலைதள பிரபலமான சஞ்சனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

ஷியாமக் தாவர் போன்ற மற்றும் பிரபு தேவா, ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோவின் குழு இவ்விழாவை நடனங்களால் சிறப்பிக்கவுள்ளது.

புகழ்பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரும் தனது மயக்கும் நிகழ்ச்சிகளால் மேடையை அலங்கரிக்கவுள்ளார்.
பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளைக் கலக்கும் அவரது திறன் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கும், விருந்தினர்கள் உண்மையிலேயே மறக்கமுடியாத இன்னிசை அனுபவத்தைப் பெறுவார்கள்.

மதிப்பிற்குரிய ஊடக அதிபரும் சன் பிக்சர்ஸ் தலைவருமான கலாநிதி மாறன், ஆந்திராவின் ஏபி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சஞ்சய், வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ். தாணு, ஏ&பி குரூப்ஸின் அருண் பாண்டியன், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி மற்றும் ஐங்கரன் கருணா உட்பட, கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரின் பங்கேற்பு பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்த திருமணத்தை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X