Kamal: பான் இந்தியா மார்க்கெட்டை டார்கெட் செய்த உலகநாயகன்... ராஜமெளலியுடன் இணையும் கமல்..?

சென்னை: கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் உலகநாயகன்.

 Kamal: Rajamouli Is Reportedly Teaming Up With Kamal Haasan

வினோத், மணிரத்னம் ஆகியோரின் இயக்கத்திலும் தலா ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், இயக்குநர் ராஜமெளலி உடன் கமல்ஹாசன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமலுடன் இணையும் ராஜமெளலி: சினிமா, அரசியல் என இரட்டை குதிரையில் சவாரி செய்து வரும் கமலுக்கு விக்ரம் திரைப்படம் சூப்பர் ஹிட் கொடுத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா போன்ற சூப்பர் ஹீரோக்கள் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கமல் கேரியரில் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக விக்ரம் அமைந்தது.

பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அதனால், கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தை தூசுதட்டினார் இயக்குநர் ஷங்கர். இன்னொரு பககம் பிரபாஸுடன் இணைந்து ப்ராஜக்ட் கே எனப்படும் கல்கி படத்திலும் நடித்து வருகிறார் கமல். இரண்டு பாகங்களாக உருவாகும் கல்கியில் கமல்ஹாசன் தான் வில்லன் கேரக்டரில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. பான் இந்தியா படமாக உருவாகும் கல்கி கமல் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் 2, கல்கி படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்தடுத்து மேலும் இரண்டு படங்களில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன். அதன்படி கமலின் 233வது படத்தை ஹெச் வினோத்தும், 234வது படத்தை மணிரத்னமும் இயக்கவுள்ளனர். இவர்களது வரிசையில் டோலிவுட்டின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலியும் கமலுக்காக கதையுடன் வெயிட்டிங்கில் இருக்கிறாராம். மகதீரா, நான் ஈ, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என ராஜமெளலி இயக்கிய படங்கள் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றன.

தற்போது டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய படத்தை இயக்கவுள்ளார் ராஜமெளலி. மகேஷ் பாபுவின் 29வது படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகளுக்கு நடுவே கமலுக்கும் கதை கூறியுள்ளார் ராஜமெளலி. கமல்ஹாசன் தரப்பில் இருந்தும் இதற்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட், டோலிவுட் திரையுலகையே பரபரப்பாக்கியுள்ளது.

கமல் - ராஜமெளலி காம்போவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட மேலும் பல மொழிகளில் பான் இந்தியா ஜானரில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும், 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷங்கர், மணிரத்னம் ஆகியோரைத் தொடர்ந்து ராஜமெளலியுடன் கமல் இணைவது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், இதுகுறித்து அபிஸியல் அப்டேட் எதுவும் வெளியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X