தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரபல மலையாள நடிகை ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாலையோரம் கிடந்து பின்னர் பரிதாபமாக இறந்தது ரசிகர்களின் நினைவுக்கு வந்துள்ளது.
பிரபல மலையாள நடிகை மானபங்கப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த மலையாள நடிகை நிஷா நூரின் பரிதாபமான மரணம் குறித்து தற்போது மீண்டும் பேச்சு எழுந்துள்ளது. அவர் தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார்.
நிஷாவின் வாழ்க்கை பரிதாபமாக ஆனதற்கு தயாரிப்பாளர் ஒருவரே காரணம் என்று கூறப்பட்டது.

கமல், ரஜினி
உலக நாயகனின் டிக் டிக் நடிக் படத்தில் நடித்தவர் நிஷா நூர். அவர் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். ஹிட் படங்களை கொடுத்த அவர் திடீர் என்று நடிப்பை நிறுத்தினார்.

விபச்சாரம்
தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதால் அவர் நடிக்கவில்லை என்று அப்போது கூறப்பட்டது. பாலியல் தொழில் விவகாரம் பற்றி தெரிந்த இயக்குனர்கள் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை.

தர்கா
தயாரிப்பாளர் ஒருவரால் தடம் மாறிப் போன நிஷா எங்கே போனார் என்றே தெரியாமல் இருந்தது. பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே சாலையோரம் அவர் எலும்புக்கூடு நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எய்ட்ஸ்
நிஷாவின் உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடிக் கொண்டிருந்தது. முஸ்லிம் முன்னேற்ற கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.


Click it and Unblock the Notifications











