Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் #BigBossTamil2
பிக்பாஸ் 2-வின் டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் கமல் வெளியிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
கடந்தாண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் கமல் தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில் ஆரவ் வெற்றியாளராக தேர்வானார்.
இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது.
ஆனால், அதற்கு மாறாக தனது அரசியல் பணிகளுக்கு இடையே பிக்பாஸ் 2 நிகழ்ச்சியையும் கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு டீசரை வெளியிட்டார். இரவு 7 மணி முதல் விஜய் டிவியில் இந்த டீசர் ஒளிபரப்பாக இருக்கிறது.
மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன் #உங்கள்நான்
— Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2018
Coming to meet my people again. Yours forever.
#BiggBossThePeoplesStage#BiggBossTamil2@vijaytelevision pic.twitter.com/HAyoBH8R2G
இந்த டீசருடன் கமல் வெளியிட்டுள்ள பதிவில், 'மீண்டும் என் மக்களைச் சந்திக்க வருகிறேன். உங்கள் நான்' எனத் தெரிவித்துள்ளார்.
முதல் சீசன் போலவே இரண்டவது சீசன் மிக பிரமாண்டமாக செட் அமைப்புடன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா, ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி, ஆரவ் போன்றோர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானார்கள். எனவே, இந்த இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் என்ற எதிர்பார்ப்பும், ஆவலும் மக்களிடையே அதிகமாக உள்ளது.