twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் வீட்டு மாடியும் மூன்று முடிச்சு ரஜினியும்!

    By Shankar
    |

    எழுபதுகள் எண்பதுகள் என்றில்லை... இன்றைக்குப் பார்த்தாலும் கையில் சிகரெட்டுடன் ரஜினி நிற்கும் ஒரு கறுப்பு வெள்ளை ஸ்டில் பார்த்ததும் சட்டென்று கவனம் கவரும்.

    இந்த ஸ்டில் எடுக்கப்பட்டது மூன்று முடிச்சு படத்துக்காக. கமல் ஹாஸனின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டு (இப்போது அலுவலகம்) மாடியில். இதனை சமீபத்தில் நடந்த மய்யம் பட இசை வெளியீட்டு விழாவில் கமல் நினைவு கூர்ந்தார்.

    நவீன் சஞ்சய், ஜெய் குஹானி நடிக்கும் மய்யம் படத்தை ஆதித்யா பாஸ்கர் இயக்க, கமலின் நண்பரும் ஓவியருமான ஏ.பி.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.

    கமல் வெளியிட்டார்

    கமல் வெளியிட்டார்

    இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தில் நடந்தது. இதில், கமல்ஹாசன் கலந்துகொண்டு பாடலை வெளியிட, நடிகை கவுதமி பெற்றுக்கொண்டார்.

    ஆவி படங்கள்

    ஆவி படங்கள்

    கமல் பேசுகையில், "எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை கிடையாது. ஆனால், தற்போது ஆவி படங்களுக்குத்தான் நல்ல மார்க்கெட் உள்ளது.

    நானும் சக்தியும்

    நானும் சக்தியும்

    இந்த விழா நடந்து கொண்டு இருக்கிற இடத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடந்து இருக்கிறது. ஆர்.சி. சக்தி மற்றும் கமல் என்ற பெயர் தெரியாத இரண்டு இளைஞர்கள் சேர்ந்து இந்த இடத்தில்தான் ‘உணர்ச்சிகள்' என்ற படத்தை ஆரம்பித்தோம்.

    வேறு நாயகன் கிடைக்காததால்...

    வேறு நாயகன் கிடைக்காததால்...

    அந்த படத்துக்கு நாயகன் வேடத்துக்கு வேறு ஆள் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல்தான் அந்த கதாபாத்தித்துக்கு நான் கிடைத்தேன். அங்கு எடுத்த படங்களைப் பார்த்துதான் அய்யா கே.பாலச்சந்தர் எனக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

    ரஜினி

    ரஜினி

    இங்குதான் பாரதிராஜா, மணிரத்னமெல்லாம் பேசி மகிழ்ந்திருக்கிறோம். பாலசந்தர் பலமுறை வந்து போயிருக்கிறார். அதோ அந்த பக்கத்து மாடியில் நின்று ஒரு இளைஞர் சிகரெட் பிடிப்பது போன்ற ‘போட்டோஷூட்'டும் இங்கு நடந்தது. அவர்தான் ‘மூன்று முடிச்சு' படத்தில் நடித்த ரஜினிகாந்த்.

    வாழ்த்துகிறேன்

    வாழ்த்துகிறேன்

    இப்படி பலருடைய சினிமா வாழ்க்கை இங்குதான் அரங்கேற்றப்பட்டது. அப்படிப்பட்ட இடத்தில் இளைய தலைமுறையினர் எடுக்கும் ‘மய்யம்' படவிழாவும் நடக்கிறது. இவர்களும் வளர வாழ்த்துகிறேன்," என்றார்.

    ஏபி ஸ்ரீதர்

    ஏபி ஸ்ரீதர்

    தயாரிப்பாளர் ஸ்ரீதர் கூறுகையில், "இந்த படத்தின் இயக்குநர் ஆதித்யா பாஸ்கர்ல, பங்குபெற்ற அத்தனை பேரும் கல்லூரிகளில் படிச்சுக்கிட்டு இருக்கிற மாணவர்கள். கல்லூரி விடுமுறை ஆரம்பிக்கும் போது படம் எடுத்து, லீவ் முடியறதுக்குள்ள படத்தை முடிச்சுட்டோம். படத்தை போட்டு பார்க்கிற வரைக்கும் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லக் கூடாதுன்னு இருந்தேன். முழுசா பார்த்து திருப்தியான பிறகுதான் இப்படியொரு படம் எடுக்கிற தகவலையே வெளியில் சொல்ல ஆரம்பிச்சேன்," என்றார்.

    English summary
    Kamal remembered his days with Rajinikanth during Moondru Mudichu time at his Alwarpet office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X