இப்பவும் ரேவதி கூட நடனமாட ரெடியாகிவரும் கமல்ஹாசன் - "தலைவன் இருக்கிறான்"

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் கமல் ஹாசன் தற்போது வேறு ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்றும் படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஏ.ஆர். ரஹ்மான். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் ஸ்டார் ஹீரோக்கள் அமீர் கான் மற்றும் சயீப் அலிகான் நடிக்கஉள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Kamal -Revathi a lovable pair to join hands after several years

தனிஒருவன் திரைப்படத்திற்கு பிறகு மோகன்லாலுடன் உலக நாயகன் இணைந்து நடிக்கஉள்ளார் என்றும் ஒரு புறம் பேசப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் மற்றுமொரு புதிய தகவல் "தலைவன் இருக்கிறார்ன்" படத்தை பற்றி வெளியாகியுள்ளது. அதாவது தேவர் மகன், புன்னகை மன்னன் போன்ற படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்த நடிகை ரேவதி, இந்த திரைப்படம் மூலம் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள்.

நீண்ட கால இடைவேளைக்கு பிறகு நடிகை ரேவதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அம்மா கணக்கு, குலேபகாவலி, பவர் பாண்டி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரேவதி தற்போது எரியும் கண்ணாடி, அழியாத கோலங்கள் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி பிஸியாக இருக்கும் நடிகை ரேவதி மீண்டும் உலக நாயகனுடன் இணைவது ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளித்துள்ளது. தலைவன் இருக்கிறான் திரைப்படம் அரசியில் சார்ந்த கதை என்றும் அதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது . கூடிய விரையில் இப்படத்தை பற்றி அறிவிப்புகள் தெரிவிக்கு படும்.

மேலும் தனது தனித்துவமான நகைச்சுவையால் எண்ணில் அடங்க ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள வைகை புயல் வடிவேலு அவர்கள் ஒரு மிக பெரிய இடைவேளைக்கு பிறகு தலைவன் இருக்கிறன் திரைபடத்தில் ஒரு கை இல்லாத ஒருவராக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெகு நாட்களாக வடிவேலுவின் புது புது காமெடி இல்லாமல் தவித்து போய் இருந்தவர்களுக்கு இந்த தகவல் மட்டும் உண்மையாய் இருந்தால் அவர்களின் சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. இப்படத்தின் பற்றின மேலும் சில தகவல்கள் கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X