'கடாரம் கொண்டான்' - கமல் வெளியிட்ட விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

விக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் கமல் வெளியிட்டார்.

சென்னை: விக்ரம் நடிக்கும் கடாரம் கொண்டான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.

சாமி ஸ்கொயர் படத்தையடுத்து விக்ரம் நடிக்கும் புதிய படம் கடாரம் கொண்டான்'. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அக்ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை தூங்காவனம் படத்தை இயக்கிய ராஜேஷ் செல்வா இயக்குகிறார்.

Kamal reveals Vikrams Kadaram kondan first look

தீபாவளி திருநாளையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். வெள்ளை தாடியில் வாயில் புகையில், கண்ணில் கண்ணாடியுடன் படுமிரட்டலாக இருக்கிறார் விக்ரம். வலது தோள் பட்டையில் டாட்டூவுடன், உள்ளங்கையை வெறித்து பார்க்கும் விக்ரம், உண்மையிலேயே வித்தியாசமாக தெரிகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குதா ஒளிப்பதிவு செய்கிறார். கடாரம் கொண்டான் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X