ஆஹா.. நல்லா நடிக்கிறீங்களே.. நேற்று நிஷா.. இன்று அர்ச்சனா.. அசிங்கப்படுத்திய கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நிஷாவை வெளுத்தெடுத்த கமல் இன்று அர்ச்சனாவை அசிங்கப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அர்ச்சனாவின் அப்பா மரணம் குறித்து பேசிய நிஷாவை உண்டு இல்லை என செய்தார் கமல்.
நம்பி சொன்ன ஒரு அந்தரங்கத்தை எப்படி வெளியே சொல்லலாம் என கிழித்து தொங்கவிட்டார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அர்ச்சனாவை வச்சு செய்யவுள்ளார் கமல் என்பது புரமோவில் தெரியவந்துள்ளது.

மைக் விவகாரம்
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் பேசும் கமல், மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஹவுமேட்ஸ் பேசுவதை கையில் எடுத்துள்ளார். இந்த புரமோவில் பேசும் கமல் எல்லாரும் மைக்கை சரியா போட்ருக்கீங்களா என கேட்கிறார்.

அர்ச்சனா.. கழட்டி வைப்பது..
தொடர்ந்து பேசும் கமல், இல்ல அப்பப்போ எல்லாரும் கழட்டி வச்சுடுறீங்களே.. என்று கேட்டு அர்ச்சனா பக்கம் திரும்புகிறார். அப்போது பேசும் அவர், அர்ச்சனா கழட்டி வைப்பது வேறு விதமாக எனக்கு தோன்றுகிறது என்று கூறுகிறார்.

பட்டியலிட்ட கமல்
அதற்கு எப்போ சார் என்று ஒன்றுமே தெரியாதது போல் கேட்கிறார் அர்ச்சனா. அதனைக் கேட்ட கமல், நல்லா நடிக்கிறீங்களே என்பதை போல ஆகா.. என்கிறார். மேலும் சோம சேகர்கிட்ட, நிஷாக்கூட என பட்டியலிடும் கமல் ஷிவானிக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லும் போது மைக்கை கழட்டி வச்சுட்டீங்க என அர்ச்சானவை அசிங்கப்படுத்திவிட்டார்.

விதிமுறை மீறல்
அப்போது அனிதா சிரிப்பதை பார்த்த கமல், எதோ சொல்லிட்டு இருந்தீங்களே என்ன என்று கேட்கிறார். தொடர்ந்து மைக்கை கழட்டி வைக்கிறது ஒரு விதிமுறை மீறல்தான் என்று கூறும் கமல், இதுக்கு முன்னாடி இப்படி செய்தவர்களை வெளியே அனுப்பிச்சுருக்கோம் என்கிறார்.

இப்போவாது கேட்டீங்களே..
கமல் பேசுவதை கேட்கும் அர்ச்சனா அப்படியே தலையில் கை வைக்கிறார். கமல் இன்று மைக் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதை பார்த்த ரசிகர்கள், அப்பாடா இப்போவாது இதைக் கேட்டீர்களே என பெருமூச்சு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











