ருத்ர காளியா மாறிட்டீங்க.. கடைசி வரை வச்சு செய்த கமல்.. அசிங்கப்பட்டு அடங்கிப் போன அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிலும் அர்ச்சனாவை வேண்டிய அளவுக்கு வச்சு செய்தார் கமல்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது அர்ச்சனாவின் முட்டையை தொடச் சென்றார் சோம்.
அப்போது யாரோ ஒருவரின் கைப்பட்டு முட்டை உடைந்து விட்டது. சோம் தான் உடைத்தார் என அர்ச்சனாவும் அர்ச்சனாதான் உடைத்தார் என சோமும் மாறி மாறி குற்றம் சாட்டினர்.

எப்படி எறியலாம்?
சோம் சொன்னதை கடைசி வரை அர்ச்சனா ஏற்காததால் அவருடைய முட்டையை தூக்கி எறிந்தார் சோம். இதனால் கடுப்பான அர்ச்சனா, என் படம் உள்ள முட்டையை எப்படி எறியலாம் என அவருடன் மல்லுக்கு நின்றார்.

கோழியாக மாறி..
இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து நேற்றைய எபிசோடில் பேசிய கமல், கோழிப்பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா தனது கோழி முட்டையை பாதுகாத்த விதம் குறித்து பேசினார். நிஜமாகவே ஒரு கோழியாக மாறினார் என்று பாராட்டினார்.

ருத்ர காளியா மாறிட்டீங்க
இறுதியில் வெடித்த அந்த கோபம், நீங்க திடீர்னு ருத்ர காளியா ஆயிட்டீங்க.. அது நீங்கள் இல்லையே முட்டைதானே, அது ஒரு விளையாட்டு கருவிதானே என்று கமல் கூற, முட்டையில என் போட்டோ இருந்துச்சு சார் என்றார்.

தோத்துப்போனதால் வந்தது
அதற்கு நாம போட்டோவ எரிச்சு, கிழிச்சு எல்லாம் பண்ணியிருக்கோம் நம்ம, அப்போ வராத கோபம் இப்போ ஏன் வருவானே. அது போட்டோவை தூக்கிப் போட்டதால் வந்த கோபம் என்பதை தாண்டி, தோத்து போயிட்டதால் வந்ததாக தோன்றியது என்றார்.

வாக்குவாதம் தான் காரணம்
அதற்கு இல்லை சார் சோம் தூக்கிப் போட்டதால் தான் வந்தது, வேறு யார் தூக்கிப்போட்டிலுருந்தாலும் கோபம் வந்திருக்காது என்றார் அர்ச்சனா. அதற்கு பதில் சொன்ன கமல், சோம் தூக்கிப் போட்டதற்கு காரணம், அவர் உடைக்கவில்லை என்று கூறியும் அந்த வாக்குவாதம் தொடர்ந்ததால்தான் என்றார்.


Click it and Unblock the Notifications











