கடலை மேட்டர் முதல் அடி முட்டாள் வரை பாலாஜியை வறுத்தெடுத்த கமல்.. வேற லெவல் கிழி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடலை மேட்டர் முதல் ஆரியை அடிமுட்டாள் வரை பாலாஜி பேசிய அத்தனை வார்த்தைகளையும் வச்சு விளாசி விட்டார் கமல்.

Recommended Video

Bigg Boss சனிக்கிழமை Episode, Aari செய்தது தப்பு | Kamal Hassan

மக்கள் மத்தியில் இருக்கு ஆரியின் மரியாதையையும் அவருக்கு உள்ள ஆதரவையும் குலைக்க வேண்டும் என்ற நோக்கில் அவரை உண்டு இல்லை என செய்து வந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

குறிப்பாக பாலாஜி ஆரியிடம் ரொம்பவே தரக்குறைவாக நடந்து கொண்டார். அவரை அடிக்கவில்லை என்பது மட்டுமே மிச்சம்.

கமல் விசாரணை

கமல் விசாரணை

இதனால் கொதித்து போன ரசிகர்கள் பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் பாலாஜியை வறுத்தெடுத்தார் கமல். அதாவது, இதற்கு முன்பு டைட்டிலை கைப்பற்றியவர்கள் எல்லாரும் கடலை சாப்பிட்டுவிட்டு வாங்கிச் சென்றனர் என்று கூறியதை முதலில் கையில் எடுத்தார் கமல்.

கிண்டல் செய்கிறீர்கள்

கிண்டல் செய்கிறீர்கள்

இதுகுறித்து கேட்ட கமல் கடலை சாப்பிட்டவர்கள் டைட்டிலை ஜெயித்திருக்கிறார்கள் என்றால். நீங்கள் தொடத்துடிக்கும் அந்த பதவியையும் கிண்டல் செய்கிறீர்கள் அதனை அடைய செய்யும் ஆடியன்ஸையும் கிண்டல் செய்கிறீர்கள் என்றார்.

நான் தலகாணி அல்ல

நான் தலகாணி அல்ல

அதற்கு பதில் சொன்ன பாலாஜி, தான் அப்படி சொல்லவே இல்லை என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினார். இதனால் கடுப்பான கமல், பாலாஜி, பாலாஜி என்று அமைதியாக அழைத்து நான் தலகாணியும் இல்லை மைக்கும் இல்லை. என்னை தூக்கி அடிக்க. என் மைக்கையும் கழட்ட முடியாது என்று அவர் பாணியில் எச்சரித்தார்.

ஆடியன்ஸ்க்கு ஞாபகம் இருக்கும்

ஆடியன்ஸ்க்கு ஞாபகம் இருக்கும்

அப்போதும் தான் சொன்னதை ஒத்துக்கொள்ளவில்லை பாலாஜி. இதனை தொடர்ந்மு ஆஜித் உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்டார். இருக்கு சார் என்று கூறிய ஆஜித் இடத்துடன் பாலாஜி பேசிய வசனத்தையும் கூறினார். மேலும் அனிதாவிடம் சொன்னதைதான் நான் சொன்னேன் என்றார். அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று அனிதாவுக்கும் ஞாபகம் இருக்கும் ஆடியன்ஸுக்கும் ஞாபகம் இருக்கும்.

எங்கு வைக்க வேண்டுமோ?

எங்கு வைக்க வேண்டுமோ?

மக்களுக்கு இருக்குற சகிப்புத்தன்மையைவிட உங்களுக்கு ஒன்றும் அதிகம் இல்லை. மக்களை தப்பு சொல்ல முடியாது. யாரை எங்கு வைக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். வைக்க வேண்டிய இடத்துல வைப்பார்கள். எங்க வேண்டும் என்றாலும் வைப்பார்கள் என்று எச்சரித்தார் கமல்.

நான் கொடுத்த கை குலுக்கல்

நான் கொடுத்த கை குலுக்கல்

தொடர்ந்து பேசிய கமல், நான் உங்களை நிறைய பாராட்டியிருக்கிறேன். ஆனால் உங்களின் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. 2 அடி ஏறி ஒன்றைரை அடி சறுக்குவது வளர்ச்சி அல்ல. அது நான் உங்களுக்கு கொடுத்த கைக்குலுக்கல் என்றார் கமல்.

சாரி கேட்டீங்களா?

சாரி கேட்டீங்களா?

அதற்கு பதில் கூறிய பாலாஜி, நான் நடந்து கொண்ட விதத்துக்காக வருத்தப்படுகிறேன். அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்ட கமல் எனக்கும் வருத்தமாக உள்ளது. ஏமற்றமாக உள்ளது என்றார். மேலும் ஆரி சாரி கேட்டாரா என்ற கமலின் கேள்விக்கு ஞாபகம் இல்லை என்றார் பாலாஜி. நீங்க ஆரிக்கிட்ட சாரி கேட்டிங்களா என்ற கேள்விக்கு நான் சாரி சொன்னேன் என்றார்.

எப்படி சறுக்கினார்?

எப்படி சறுக்கினார்?

மேலும் ஆரி சாரி சொன்னாரா என்று ஆஜித்க்கிட்ட கேட்டேன். ஆஜித் அவர் சாரி கேட்டார் என்றதால் அதன்பிறகு நான் அவரை கேட்கும்படி கூறவில்லை என்றும் நியாயப்படுத்தினார் பாலாஜி. இதனைக் கேட்ட கமல், நான் பாராட்டின பாலாஜி எப்படி இப்படி சறுக்கினார் என்றார்.

எது நிஜ பாலாஜி?

எது நிஜ பாலாஜி?

எது நிஜ பாலாஜி? வெளியே வா உன்னை பார்த்துக்குறேன்னு மிரட்டுற பாலாஜிதான் நிஜ பாலாஜியா? என்றார். அதற்கு பதில் சொன்ன பாலாஜி, அவங்க அம்மாக்கிட்ட பேச வேண்டியதுதானே என்று கேட்டது எனக்கு கோபத்தை தூண்டிவிட்டுவிட்டது என்றார். அதற்கு திட்டணும் போல் இருந்தது.

சாரிலாம் கேட்க மாட்டேன்

சாரிலாம் கேட்க மாட்டேன்

அதுக்காக நான் சாரிலாம் கேட்க மாட்டேன் என கமலிடமே எதிர்த்து பேசினார். இதனைக் கேட்ட கமல் உங்கள் முன்னாடி கண்ணாடியை வைக்கிறேன், நீங்கள் தலையை கலைத்துவிடுவதும், சரி செய்துக்கொள்வதும் உங்கள் விருப்பம் என்றார். மேலும் நடக்குறதே வேற என்றீர்களே அது என்னவா இருக்கும் என்றார் கமல்.

எல்லாம்தான் திட்டியாச்சே

எல்லாம்தான் திட்டியாச்சே

அதற்கு திட்டியிருப்பேன் என்றார் பாலாஜி. அதான் நிறையா திட்டிட்டிங்களே இன்னும் திட்டுவீங்களா? என்ற கமல், பாலாஜி பேசியதையெல்லாம் பட்டியலிட்டார். ஒருமையிலேயே திட்டியாச்சு, மனுஷனே இல்லன்னு சொல்லியாச்சு, அடி முட்டால்னு சொல்லியாச்சும் இன்னும் கீழே போயும் திட்டியாச்சு. எல்லாம் சொல்லியாச்சு..

கெட்ட வார்த்தையில திட்டுவீங்களா?

கெட்ட வார்த்தையில திட்டுவீங்களா?

இன்னும் என்ன திட்டுவீங்க கெட்ட வார்த்தை பேசுவீங்களா.. என்று பொட்டில் அடித்தது போல் கேட்டார் கமல். அதற்கு இல்லை சார் என்றார் பாலாஜி. ஆனால் அதையெல்லாம் நம்பாத கமல், தொடர்ந்து பாலாஜியை கிழித்து விட்டார். ஆனால் இதனை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் பத்தாது அவரை வெளியேற்றுங்கள் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X