அப்படி எப்படி சொல்லலாம்.. பாலாஜி முருகதாஸை எச்சரித்த கமல்ஹாசன்.. அனல் பறந்த பிக்பாஸ்!

சென்னை: சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் என்று கூறிய பாலாஜி முருகதாஸை நடிகர் கமல் எச்சரித்துள்ளார்.

சனம் ஷெட்டி பங்கேற்ற அழகிப் போட்டியை டுபாக்கூர் அழகிப் போட்டி என்று கூறினார் பாலாஜி முருகதாஸ்.

இதனால் நொந்து போன சனம் ஷெட்டி அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கொச்சைப்படுத்துவது..

கொச்சைப்படுத்துவது..

தொடர்ந்து கமலுக்கு முன்பு பாலாஜிக்கு புரோக்கன் ஹார்ட்டை கொடுத்த சனம் ஷெட்டி, பாலாஜி தங்களின் சாதனையை டுபாக்கூர் என்று கூறியது மனதை ரொம்பவே காயப்படுத்தியதாக கூறினார். தங்களைப் போன்றவர்களின் சாதனையை கொச்சைப்படுத்துவதாக கூறினார்.

மழுப்பிய கமல்

மழுப்பிய கமல்

அப்போது பாலாஜிக்கு ஆதரவாய் பேசிய கமல், உங்களை சொல்வதாய் ஏன் நினைக்கிறீர்கள் என்றார். மேலும் பாலாஜி அதை புரூவ் பண்ணுவேன் என்று கூறியதற்கும், தொடர்ந்து அந்த பேச்சை வளர்த்ததால் அந்த வார்த்தை வந்துள்ளதாக கூறி அப்படியே மழுப்பினார் கமல்.

வெளுத்தெடுத்த கமல்

வெளுத்தெடுத்த கமல்

கமல் பேசியதைக் கேட்ட பாலாஜி, வெறித்தனமாக கையை தட்டி தனது கோபத்தை தீர்த்துக் கொண்டார். இந்நிலையில் பாலாஜி பேசியதை நேற்று கேட்கவில்லை என்று கூறிய கமல், இன்று அவர் பேசியதை கேட்டுவிட்டு வெளுத்தெடுத்தார்.

அனுபவம் இருக்கு

அனுபவம் இருக்கு

இதுதொடர்பாக பாலாஜியிடம் பேசிய கமல், உங்களுக்கு நிறைய அனுபவம் இருக்கு. உங்கள் கதையை கேட்கும் போதே அது தெரிகிறது. இன்நேரம் பலருக்கு நீங்கள் ஹீரோவாகி இருப்பீர்கள். நீங்கள் பொறுப்புடன் பேச வேண்டும்.

மரியாதையே இருக்காது

மரியாதையே இருக்காது

பல பேருக்கு அந்த போட்டியில் பங்கேற்றது பெரிய சாதனையாக இருக்கும். அதனை நீங்கள் டுபாக்கூர் என்பது மற்றவர்களை காயப்படுத்தும். முன்னெல்லாம் உங்கள மாதிரி பாடி பில்டர்களை குஸ்திகாரர்கள் என்பார்கள். மரியாதையே இருக்காது.

எச்சரித்த கமல்

எச்சரித்த கமல்

உங்களை என்ன பாடி பில்டர்.. ஊசி போட்டா உடம்பு வந்துடும் என்று கூறினால் உங்களுக்கு கஷ்டமா இருக்காதா? அதனால் இனி இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எச்சரித்தார். நேற்று வெறித்தனமாக கையை தட்டிய பாலாஜி இன்று முகமே மாறிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X