அந்தரங்கத்தை எப்படி வெளியே சொல்லலாம்.. நிஷாவை கன்னாபின்னாவென காய்ச்சிய கமல்.. கண்ணீர்விட்ட அர்ச்சனா!

சென்னை: ரோபோ டாஸ்க்கின் போது அர்ச்சனாவை பிரேக் பண்ண நிஷா பயன்படுத்திய யுக்தியை வைத்து விளாசிவிட்டார் கமல்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதன் முதல் பகுதியில் அர்ச்சனா தலைமையில் 6 பேர் ரோபோக்களாக இருந்தனர்.

பாலாஜி தலைமையில் நிஷா, ஆரி உள்ளிட்ட 6 பேர் மனிதர்களாக இருந்தனர். ரோபோக்களை கோபப்படுத்துவது, சிரிக்க வைப்பது, துன்பம் என ஏதாவது 2 உணர்ச்சிகளை கொண்டு வர வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

பேச்சை மீறிய நிஷா

பேச்சை மீறிய நிஷா

இதனை தொடர்ந்து ரோபோவாக இருந்த அர்ச்சனாவை பிரேக் பண்ண நிஷா, அர்ச்சனாவின் அப்பாவின் மரணம் குறித்து பேசினார். தங்களுடைய அணியினர் அதைப்பற்றி பேசக்கூடாது என்று கூறியும் மீறி பேசினார் நிஷா.

நிஷாவை வெளுத்த கமல்

நிஷாவை வெளுத்த கமல்

இதனால் உடைந்து நொறுங்கி அழுதார் அர்ச்சனா.

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அந்த விவகாரத்தை கையில் எடுத்த கமல் நிஷாவை வறுத்தெடுத்தார் கமல். இது தொடர்பான புரமோவிலேயே நிஷாவை வெளுத்தார் கமல்.

கண்ணீர்விட்ட அர்ச்சனா

கண்ணீர்விட்ட அர்ச்சனா

இந்நிலையில் எபிசோடில் நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமானதாகப்பட்டதா உங்களுக்கு என்று ஹவுஸ்மேட்டுகளை கேட்டார். அதற்கு பதில் சொன்ன அர்ச்சனா, நான் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் போய்விட்டேன். அதனால் என்னால் கையாள முடியவில்லை என்று கண்ணீர்விட்டார்.

எதிர்பார்க்கவே இல்லை

எதிர்பார்க்கவே இல்லை

தொடர்ந்து பேசிய கடல் நிஷா திராவகம் லெவலுக்கு போனதாக கூறினார். மேலும் நிஷாவிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை என்றனார். அதனைக் கேட்ட நிஷா, எந்த இடத்திலேயுமே நான் தவறா பயன்படுத்துனும்னு நினைக்கல சார் என்று கூறினார் என்றார்.

எப்போது சொன்னார்?

எப்போது சொன்னார்?

மேலும் அர்ச்சனா அப்பாவின் மரணம் உங்களுக்கு எப்படி தெரியும் என்றார். அதற்கு என்னிடம் சொல்லியிருக்கிறார் என்று நிஷா பதில் சொல்ல, எப்போது சொன்னார்? வெளியேவே தெரியுமா? அல்லது இங்கு வந்து சொன்னரா என்று கேட்டார் கமல்.

அந்தரங்க விஷயம்

அந்தரங்க விஷயம்

அதற்கு பதில் சொன்ன நிஷா, இந்த வீட்டுக்குள் வந்துதான் பேசினோம் சார். இங்கு வந்தப்பிறகுதான் அப்பாவின் மரணம் குறித்து அர்ச்சனா எனக்கு கூறினார் என்றார். அதனைக் கேட்ட கமல் நட்பு ரீதியாக பகிர்ந்து கொண்ட ஒரு அந்தரங்க விஷயத்தை இப்படி பயன்படுத்தலாமா என்றார்.

ஏன் இழுக்கிறீர்கள்?

ஏன் இழுக்கிறீர்கள்?

இந்த விளையாட்டில் குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் ஏன் இழுக்கிறீர்கள்? நீங்கள் தெரிந்தே இந்த யுக்தியை எடுத்தது போல் தெரிகிறது என்றார். அதற்கு நிஷா மறுப்பு தெரிவிக்க, நீங்கள் தெரிந்து செய்தது போல்தான் இருந்தது என மீண்டும் கூறினார் கமல்.

Recommended Video

VJ Chitra நடித்த Calls திரைப்படம் First Look Poster | Tamil Filmibeat
ரசிகர்களுக்கு வேண்டுகோள்

ரசிகர்களுக்கு வேண்டுகோள்

தொடர்ந்து பேசிய நிஷா நான் செய்தது தவறு என்று உணர்ந்தேன் சார். அதற்காக மன்னிப்பும் கேட்டேன் சார் என்றும் நிஷா கூறினார். இதனைக் கேட்ட கமல் உங்களுக்காக விளையாடுங்கள் ஒரு வரம்புடன் விளையாடுங்கள் என்றார். மேலும் ரசிகர்களும் குடும்பத்தினரை இழுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X