அப்பா மேட்டரை கையில் எடுத்த கமல்.. நிஷாவை ஆசிடுடன் ஒப்பிட்டு.. செம விளாசல்.. கண்கலங்கிய அர்ச்சனா!
சென்னை: டாஸ்க்கின் போது அர்ச்சனாவின் அப்பா மரணம் குறித்து பேசிய நிஷாவை வறுத்தெடுத்துள்ளார் கமல்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக புதிய மனிதா என்ற தலைப்பில் ரோபோ டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் ஒரு டீம் மனிதர்களாகவும் மற்றொரு டீம் ரோபோக்களாகவும் இருக்க வேண்டும். அதில் மனிதர்கள் ரோபோக்களுக்கு மகிழ்ச்சி, துக்கம், கோபம் போன்ற உணர்வுகளில் எதையாவது இரண்டு உணர்ச்சிகளை கொண்டு வரவேண்டும்.

ரோபோக்கள் மனிதர்கள்
இரண்டு பகுதியாக கொடுக்கப்பட்ட இந்த டாஸ்க்கில் முதல் பகுதியில் அர்ச்சனா டீம் ரோபோக்களாகவும் இரண்டாவது பகுதியில் அர்ச்சனா டீம் மனிதர்களாகவும் பாலாஜி டீம் ரோபோக்களாகவும் இருந்தனர்.

அப்பாவின் மரணம்
இதன் முதல் பகுதியில் அர்ச்சனா ரோபோவாக இருந்த போது அவரை பிரேக் பண்ண நிஷா, அர்ச்சனாவின் அப்பாவின் மரணம் குறித்து பேசினார். தங்களுடைய அணியினர் அதைப்பற்றி பேசக்கூடாது என்று கூறியும் மீறி பேசினார் நிஷா.

நிஷா பேசியது நியாமா?
இதனால் உடைந்து நொறுங்கி அழுதார் அர்ச்சனா. இந்நிலையில் இன்றைய எபிசோடில் அந்த விவகாரத்தை கையில் எடுத்து நிஷாவை வறுத்தெடுத்துள்ளார் கமல். அதில் பேசும் கமல், நிஷா பயன்படுத்திய யுக்தி நியாயமானதாகப்பட்டதா உங்களுக்கு என்று கேட்கிறார்.

கையாள முடியவில்லை
அதற்கு நான் 20 ஆண்டுகளுக்குப் பின்னால் போய்விட்டேன். அதனால் என்னால் கையாள முடியவில்லை என்று கண்கலங்கினார் அர்ச்சனா. தொடர்ந்து பேசும் கமல், நீர், நெருப்பு போக ஒரு திராவகம் லெவல்ல நிஷா.. நான் எதிர்பார்க்கவே இல்லை என்கிறார் கமல்.

பயன்படுத்திட்டீங்களே..
அதனைக் கேட்ட நிஷா, எந்த இடத்திலேயுமே நான் தவறா பயன்படுத்துனும்னு நினைக்கல சார் என்று கூறிகிறார். அதற்கு பயன்படுத்திட்டீங்களே என்று கமல் கூற, இல்ல சார் என்ற நிஷாவிடம் இல்லையென்கிறீர்களா என்று பதிலுக்கு கேட்கிறார் கமல்.

யோசிக்க முடியுமா?
தொடர்ந்து பேசும் நிஷா, நான் செய்தது தப்பில்லை என்று நான் எந்த இடத்திலேயுமே சொல்லவில்லை என்கிறார் நிஷா. அதனைக் கேட்ட கமல், அந்த மாதிரி தெரியலையே பார்க்குறவங்களுக்கு, யோசிக்காம அப்படி ஒரு யுத்தியை செய்ய முடியுமா என்று கேட்கிறார் கமல். கமல் கேட்கும் கேள்வியால் நிஷாவின் முகமே மாறுகிறது.


Click it and Unblock the Notifications