ப்பா.. பின்னிட்டீங்க.. இதுக்குத்தான் அபிஷேக் மறுபடியும் வந்தாரா.. சும்மா வச்சு செய்யுறாரே கமல்!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக அபிஷேக் வந்துள்ள நிலையில், இந்த வாரம் கமல் சாரிடம் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்.

சனிக்கிழமை எபிசோடிலேயே பக்காவாக பாவனி சேவ் ஆன நிலையில், மீதமுள்ள போட்டியாளர்களில் முதல் நபராக யார் சேவ் ஆவார்கள் என அபிஷேக்கை கணிக்க சொன்னார் கமல்.

அபிஷேக்கின் கணிப்பை பார்த்த கமல் தப்பு உட்காருங்க என அடக்கி விட்ட மூன்றாவது புரமோ வைரலாகி வருகிறது.

தாமரைக்கு டோஸ்

தாமரைக்கு டோஸ்

இரண்டாவது புரமோவிலேயே இந்த வீட்டில் வாய் பேசக் கூடாதா சார் என தாமரை கேட்க பேசலாம் ஆனால், என்னவாய் பேச வேண்டும் என்பது தான் முக்கியம் என கமல் நறுக்கென குட்டு வைத்து தாமரை செல்விக்கு செம டோஸ் கொடுத்து விட்டார். பாவனி முதல் நபராக சேவ் ஆன நிலையில், அவரை பிடிக்கவே பிடிக்காது என பந்தா காட்டிய தாமரை எத்தனாவது இடத்தில் சேவ் ஆகப் போகிறார் என்பது தான் இன்றைய ஹைலைட்.

நீங்க சொல்லுங்க அபிஷேக்

நீங்க சொல்லுங்க அபிஷேக்

தாமரை செல்வி தான் தன்னை பொறுத்தவரையில் டைட்டில் வின்னராக வரவேண்டும் என ஏற்கனவே சொன்ன அபிஷேக் ராஜா இந்த நாமினேஷன் பட்டியலில் முதல் நபராக தாமரை தான் சேவ் ஆவார் என கமல் கேட்டதும் டக்கென எதையுமே யோசிக்காமல் பதில் அளித்து விட்டார். வெளியே போயும் பிக் பாஸ் பார்க்கலயா அபிஷேக் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

பின்னிட்டீங்க

பின்னிட்டீங்க

தாம்ரை செல்வி தான் முதல் நபராக சேவ் ஆவார் என அபிஷேக் கணித்து சொன்னதை கேட்ட கமல், ப்பா.. பின்னிட்டீங்க.. என பில்டப் கொடுத்து விட்டு தப்பு உட்காருங்க என அபிஷேக்கை மொத்தமாக ஆஃப் செய்து விட்டார். பாவனிக்கு அடுத்த நபராக சிபி தான் காப்பாற்றப்படுகிறார் என கமல் சொல்ல தாமரையின் முகமும் அபிஷேக்கின் முகமும் அப்படியே சுருங்கிப் போனது.

லேபரை ரெப்ரசன்ட் பண்றாங்க

லேபரை ரெப்ரசன்ட் பண்றாங்க

தாமரை செல்வி சாமானியராக உள்ள நிலையில், அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என நினைத்தேன் என்பதை சொல்ல வந்த அபிஷேக் ராஜா லேபரை ரெப்ரசன்ட் பண்றாங்க என தன்னுடைய விளக்கத்தை கொடுக்க இல்லை என மறுபடியும் அபிஷேக்கை வச்சு செய்து விட்டார் கமல். இதுக்குத்தான் பாவம் ஆடு ரெண்டாவது தடவை தலை கொடுத்ததா? என பிக் பாஸ் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X