பாலாவை பஞ்சர் பண்ணுவாருன்னு பார்த்தா.. ரியோவை பஞ்சர் பண்ணிட்டு இருக்காரே.. ஓ சன் டே இருக்குமோ?

சென்னை: காதல் கண்ணை மறைக்குதுன்னு ஆரி கொளுத்திப் போட, பாலா பற்றி எறிய, காதில் தப்பா கேட்ட ரியோ மன்னிப்பு கேட்ட பிறகும், கமல் அந்த விஷயத்தை கிண்டியது ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

கமல் வந்த உடனே பாலாவை புடிச்சு வெளு வெளுன்னு வெளுக்கணும்னா எப்படிப்பா, திங்கட்கிழமை எபிசோட்ல இருந்து வர வேண்டாமா?

ஆரி சட்டென கை தூக்கி தவளை தன் வாயால் கெடும் என்பது போல, மாட்டிக் கொண்டார்.

பாலா எஸ்கேப்

பாலா எஸ்கேப்

பிக் பாஸ் புரமோவை எல்லாம் பார்த்தால், இன்னைக்கு பாலாவுக்கு நல்லா டோஸ் இருக்கு என நினைத்த ரசிகர்களுக்கு வழக்கம் போல அல்வா கொடுத்துவிட்டு, பாலாவை லேசா தடவி கொடுத்து விட்டு, உங்க கிட்ட அப்புறம் வரேன் என நகர்ந்து ரியோவிடம் சென்றார். இன்னைக்கி பாலா எஸ்கேப்.

தன் கையால் கெட்ட ஆரி

தன் கையால் கெட்ட ஆரி

தவளை தன் வாயால் கெடுவது போல, காதல் கண்ணை மறைக்குதே என்பதை யார் சொன்னா என கேட்பதற்கு முன்னமே கை தூக்கி ஆரி தன் கையால் கெட்டு விட்டார். பாலாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான் என பில்டப் கொடுத்து சீன் போட்ட பாலா ஆர்மியினர் கடைசியா பாலா ஒண்ணுமே பண்ணாததை பார்த்து பல்பு வாங்கினர்.

நான் லவ்வே பண்ணல

நான் லவ்வே பண்ணல

பாலாஜி முருகதாஸ் திரும்ப திரும்ப தான் ஷிவானியை லவ் பண்ணவே இல்லை என்றும், அண்ணன் தங்கையாகவும் தான் பழகுகிறோ என சொல்லி வருகிறார். ஆரி அண்ணன் என்கிட்ட நேர்ல கேட்டு இருந்தா கூட நானே சொல்லியிருப்பேனே என அனிதாவிடமும் கமல் போட்டுக் கொடுத்த பிறகு பேசியதை பார்த்த ரசிகர்கள் அவ்ளோ டம்மி பீசா நீ என்பது போல ரியாக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை

பாவம் ரியோ, தேரை இழுத்து தெருவில் விட்ட கதை. கன்ஃபஷன் ரூமில் ஆரி, பாலாவை பற்றி சொன்னதற்கு, பாலா தேவையில்லாமல், அத்தனை பேர் முன்னிலையில் கத்தியது தவறு இல்லையாம். அவன் கத்தியதும், காதை கிழிச்சுடுவேன் என ரியோவுக்கு கேட்டதுதான் தப்பு என்பது போல கமல் ரியோ பக்கம் வந்து சாட்டையை சுழற்ற, இன்னா சாரே, பாலா இன்னும் நிகழ்ச்சிக்கு வேண்டுமா? என்பது போல ஆடியன்ஸ் கேட்கத் துவங்கி விட்டனர்.

கதவை உதைத்தது

கதவை உதைத்தது

பாலாஜி முருகதாஸ் பாத்ரூம் டோரை அடித்தது பற்றி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல் பேசுவாரா என்பதை பார்ப்போம். ரியோ ராஜ், கதவை உதைத்ததை பற்றி பேச அதற்கு முன்னதாக, சகலகலா வல்லவன் படத்தில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விழுந்ததும் அதற்கு எம்.ஜி.ஆரிடம் திட்டு வாங்கிய கதையை எல்லாம் கமல் சார் சொல்லிக் கொண்டு இருந்தது எல்லாம் ரொம்பவே போரிங்.

ரியோவுக்கு பாராட்டு

ரியோவுக்கு பாராட்டு

பாலா கத்தியது பற்றி பேசாமல், ரியோ தன் தவறை உணர்ந்து பாலாவிடம் மன்னிப்பு கேட்டு, அந்த பிரச்சனை சரி செய்ததற்காக ரியோவை கடைசியாக பாராட்டினார் கமல். கொட்டுவதையும் கொட்டிவிட்டு, பாராட்டுவது தானே நம்ம பாணி என்பது போல, கமல் சார் நடந்து கொண்டாலும், அந்த அனிதா மேட்டரை அப்படியே விட்டுட்டீங்களே அய்யா என்றே ரசிகர்கள் கமெண்ட் அடித்து கிண்டல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X