Kamal Robo Shankar: “வீட்ல விசேஷங்க..?” குடும்பத்துடன் கமல்ஹாசனை சந்தித்த ரோபோ சங்கர்!

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர்.

விஜய் டிவி மூலம் பிரபலமான ரோபோ சங்கர், தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

அவரது மகள் இந்திரஜாவும் சின்ன திரையில் இருந்து சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரோபோ சங்கர் தனது மனைவி, மகளுடன் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார்.

 Kamal Robo Shankar: Robo Shankar met Kamal Haasan with his family

குடும்பத்துடன் கமலை சந்தித்த ரோபோ சங்கர்: விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்தவர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானார். கமல், விஜயகாந்த் போல மிமிக்ரி செய்வதில் தனித்துவமான ரோபோ சங்கர், உலகநாயகனின் தீவிரமான ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி மூலம் ரோபோ சங்கருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, பவர் பாண்டி, வேலைக்காரன், கலகலப்பு 2, இரும்புத் திரை, மாரி 2, விஸ்வாசம், ஹீரோ, இரவின் நிழல், கோப்ரா என பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். ரோபோ சங்கர் மூலம் அவரது மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 Kamal Robo Shankar: Robo Shankar met Kamal Haasan with his family

பிகில், விருமன் போன்ற படங்களில் ந்டித்துள்ள இந்திரஜா, அப்பா ரோபோ சங்கருடன் இணைந்து ரீல்ஸ் செய்தும் அசத்தி வருகிறார். இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்திரஜாவும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேநேரம் அவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அவரது உறவினரான கார்த்திக் என்பவருடன் ஜோடியாக பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் இந்திரஜா.

 Kamal Robo Shankar: Robo Shankar met Kamal Haasan with his family

அவருடன் தான் இந்திரஜாவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ரோபோ சங்கர் தனது குடும்பத்தினருடன் உலகநாயகன் கமல்ஹாசனை நேரில் சந்தித்துள்ளார். ரோபோ சங்கர், அவரது மனைவி, மகள் இந்திரஜா ஆகியோருடன் கார்த்திக்கும் இந்த போட்டோவில் உள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இந்திரஜாவுக்கு திருமணமா என கேட்டு வருவதோடு, அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

ரோபோ சங்கர் கமலின் தீவிர ரசிகர் என்பதால், தனது மகளின் திருமண அழைப்பிதழை முதலில் அவருக்கு கொடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம், பிக் பாஸ் சீசன் 7ல் இந்திரஜா கலந்துகொள்ளவிருப்பதாகவும், அதற்காக நன்றி சொல்லவுமே இந்த சந்திப்பு என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 Kamal Robo Shankar: Robo Shankar met Kamal Haasan with his family

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X