நீளத்தை குறைத்து... 2 மணி நேரப்படமாக... மீண்டும் ரிலீஸ் ஆகிறது கமல்ஹாசனின் ஆளவந்தான்

By

சென்னை: கமல்ஹாசனின் ஆளவந்தான் படம், நீளம் குறைக்கப்பட்டு இந்த வருடம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

கமல்ஹாசன், ரவீணா டாண்டன், மணிஷா கொய்ராலா, ரியாஸ் கான் உட்பட பலர் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளியான படம், ஆளவந்தான்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட இந்தப் படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை.

தாயம் கதை

தாயம் கதை

இதன் கதை திரைக்கதை வசனத்தை கமல் எழுதியிருந்தார். 1984-ம் ஆண்டு கமல் எழுதிய தாயம் என்ற கதையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

மீண்டும் ரிலீஸ்

மீண்டும் ரிலீஸ்

கமல் இரண்டு வேடங்களில் நடித்த இந்தப் படத்தை இப்போது மீண்டும் வெளியிட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முடிவு செய்துள்ளார்.

நீளம் குறைப்பு

நீளம் குறைப்பு

படத்தின் நீளத்தை இரண்டு மணி நேரமாக குறைத்துத் தர கமல்ஹாசனிடம் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கேட்டுள்ளதாகவும் அதற்கு கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏப்ரல், மே மாதம்

ஏப்ரல், மே மாதம்

அந்த காலக் கட்டத்தை விட இப்போது இந்தப் படத்தை ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள் என்பதால் இப்போது மீண்டும் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஏப்ரல் அல்லது மே மாதம் இந்தப் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X