ஞாபகம் வருகிறதா.. இவன் தீயென்று தெரிகிறதா.. அருவா மீசையுடன் அசத்தலாய் வந்த கமல்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்க்சியின் கமல் பங்கேற்கும் முதல் எபிசோடின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் வுஸ்மேட்ஸ்களை சந்திப்பது வழக்கம்.

அந்த வாரம் முழுக்க நடந்த விஷயங்கள், சுவாரசிய சம்பவங்கள் மற்றும் அதிருப்தி தரக்கூடிய விஷயங்களை அலசுவது வழக்கம்.

கமல் சந்திப்பு

கமல் சந்திப்பு

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த
ஞாயிற்றுக் கிழமை தொடங்கியது. அப்போது போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். அதன் பிறகு முதல் முறையாக இன்று போட்டியாளர்களை சந்திக்க போகிறார் கமல்.

காலை முதல் எதிர்பார்ப்பு

காலை முதல் எதிர்பார்ப்பு

இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் பல்வேறு பிரளயங்கள் வெடித்தன. இதனால் கமல் பங்கேற்கும் எபிசோட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கமல் பங்கேற்கும் புரமோ எப்போது வரும் என காலை முதலே எதிர்பார்த்து காத்திருந்தனர் ரசிகர்கள்.

ஞாபகம் வருகிறதா?

ஞாபகம் வருகிறதா?

இந்நிலையில் கமல் பங்கேற்கும் எபிசோடுக்கான முதல் புரமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற ஞாபகம் வருகிறதா.. இவன் தீயென்று தெரிகிறதா.. தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன் ஞாபகம் வருகிறதா? நீ இன்றி வேறில்லை என்ற பாடல் ஒலிக்க செம ஸ்டைலாய் நடந்து வருகிறார் கமல்.

தாடியை தடவி

தாடியை தடவி

தலையை கோதி.. தாடியை தடவி.. க்யூட் ஸ்மைலுடன் கேமராவை பார்த்து கையை அசைத்தப்படி அருவா மீசையுடன அசத்தலாய் வந்துள்ளார் கமல். மேலும் வெல்கம் பிக்பாஸ் சீசன் 4 என நான்கு விரல்களை அவருக்கு இருபக்கமும் சுவரை பார்த்து காட்டுகிறார்.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

இதன் மூலம் இன்றும் பார்வையாளர்கள், போட்டியாளர் அறிமுக விழாவில் பங்கேற்றது போல் ஜூம் மூலம் பங்கேற்றிருப்பார்கள் என தெரிகிறது. கமல் பங்கேற்கும் முதல் புரமோ வெளியாகியுள்ளது. இந்த புரமோ ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X