Don't Miss!
- Automobiles
எல்லாரும் வாங்க கூடிய விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! வர்ற 9ம் தேதி பெட்ரோல் வண்டிகளுக்கு எல்லாம் ஆப்பு!
- News
சரியும் அதானி.. "உண்மை வெளியே வரும்".. நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது? போட்டுடைத்த சு. வெங்கடேசன்!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- Sports
ஆட்டத்தை மாற்றியது சுப்மன் கில் அல்ல.. சூர்யகுமாரின் அந்த செயல் தான்.. அதிர்ச்சி அடைந்த நியூசி வீரர்
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வெளியானது இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. மிரட்டல் சேனாபதி கெட்டப்பில் கமல்!
சென்னை நடிகர் கமல்ஹாசன் காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படத்தின் சூட்டிங்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பட்ட இந்த படத்தின் சூட்டிங் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு பேச்சு வார்த்தைகளை அடுத்து இந்த படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
2022ம்
ஆண்டில்
அதிகம்
எதிர்பார்க்கப்பட்டு
மொக்கை
வாங்கிய
படங்கள்...
லிஸ்ட்ல
இந்தப்
படம்
தான்
டாப்!

இந்தியன் படம்
கமல்ஹாசன் சந்துரு மற்றும் சேனாபதி என இருவேறு கெட்டப்புகளில் மிரட்டிய படம் இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இசையை ஏஆர் ரகுமான் அமைத்திருந்த நிலையில் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இந்த படத்தின் வசூல் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு இருந்தது.

இந்தியன் 2 படத்தின் சூட்டிங்
கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் ஏறக்குறைய 22 ஆண்டுகள் கழித்து கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக உயிர் இழப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

மீண்டும் துவங்கிய சூட்டிங்
தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட இந்த படத்தின் சூட்டின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் தூசி தட்டி துவங்கப்பட்டது. முன்னதாக இயக்குனர் சங்கர் ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வந்த நிலையில் அவர் ஒரே நேரத்தில் அந்தப் படத்தையும் தற்போது இந்தியன் 2 படத்தையும் இயக்கி வருகிறார்.

ராம்சரண் படத்தின் சூட்டிங்
மாதத்தில் 20 நாட்கள் ராம்சரண் படத்திலும் பத்து நாட்கள் indian 2 படத்திலும் ஷங்கர் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்சரண் படத்திற்காக நியூசிலாந்தில் ஷூட்டிங்கில் ஈடுபட்ட அவர், கடந்த 3ஆம் தேதி நாடு திரும்பி கடந்த ஐந்தாம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தின் சூட்டிங் சென்னை ஏர்போர்ட்டில் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தொடர்ந்து 15 நாட்கள் சூட்டிங்
இந்தியன் 2 ஷூட்டிங்கில் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டனர். நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கெட்டப்பில் இந்த படத்தின் சூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். வரும் 20ஆம் தேதி வரை தொடர்ந்து 15 நாட்கள் இந்த படத்தின் ஷூட்டிங், சென்னையின் பல இடங்களில் திட்டமிடப்பட்டுள்ளது

சேனாபதி கெட்டப் புகைப்படம்
இதனிடையே நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கெட்டப்பில் தோன்றும் படியான படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தியன் படத்தில் முதல் பாகத்தில் இருந்ததைப் போன்றே இந்த பாகத்திலும் அவர் இந்த கெட்டப்பில் காணப்படுகிறார். இந்தப் புகைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

உற்சாக மனநிலையில் கமல்ஹாசன்
விக்ரம் படம் சர்வதேச அளவில் 450 கோடிகளை கமலுக்கு வசூலித்துக் கொடுத்துள்ளது. அந்த உற்சாகத்துடன் தற்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் அவர் பங்கேற்று வருகிறார். இந்தப் படத்தின் முதல் பாகம் மிக சிறந்த வெற்றியை அவருக்கு கொடுத்தது. அதேபோல இரண்டாவது பாகமும் சிறப்பான வெற்றியை அவருக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டில் ரிலீஸ்
இந்த படத்தின் இசையமைப்பை அனிருத் செய்து வரும் நிலையில் பாடல்களும் முந்தைய படத்தின் பாடல்களைப் போலவே சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். படத்தின் அதிகப்படியான சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் சூட்டிங் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.