விஜய்யின் ஃபேவரைட் ஸ்பாட் பனையூரில் கமல்...ஷங்கரின் மாஸ்டர் பிளான்...ரசிகர்களுக்கு சீக்ரெட் அப்டேட்

சென்னை: கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஷங்கர் இயக்கத்தில் லைகா புரோடக்‌ஷன்ஸ், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை முதல் சென்னை பனையூரில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது.

விஜய் தனது ரசிகர்களை சந்திக்கும் ஃபேவரைட் ஸ்பாட்டான பனையூரில் இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெறவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

இறுதிக்கட்டத்தில் இந்தியன் 2

கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2-வில் நடித்து வருகிறார். விக்ரம் திரைப்படம் கொடுத்த தரமான கம்பேக்கால் அடுத்தடுத்து நடிப்பில் ஆர்வம் காட்டி வரும் கமல்ஹாசனுக்கு, இந்தியன் இரண்டாம் பாகமும் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்குமா என கோலிவுட் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன. ஷங்கர் இயக்கும் இந்தியன் 2, 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிரேன் விபத்து, பட்ஜெட் பிரச்சினைகளால் சில மாதங்களாக முடங்கி கிடந்த இந்தப் படம் தற்போது மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

 பனையூரில் அடுத்த ஷெட்யூல்

பனையூரில் அடுத்த ஷெட்யூல்

சென்னை, ஹைதராபாத், திருப்பதி என பல இடங்களில் இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெற்று வந்தது. கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா ஆகியோரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. கிரேன் விபத்தின் போது எடுக்க முடியாமல் போன காட்சிகளை மீண்டும் ஷூட் செய்யவுள்ளாராம் ஷங்கர். இதற்காக பனையூரில் செட் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 விரைவில் முதல் அப்டேட்

விரைவில் முதல் அப்டேட்

இயக்குநர் ஷங்கர் இன்னொரு பக்கம் ராம்சரண், கியாரா அத்வானி நடிக்கும் RC 15 படத்தையும் இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான வாரிசு தயாரிப்பாளர் தில் ராஜூதான் ஆர்சி 15 படத்தையும் தயாரித்து வருகிறார். இந்தியன் 2, ஆர்சி 15 என இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால், எது முதலில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுவரை கிடைத்த தகவலின் படி ஆர்சி 15 ஜூன் மாதமும், இந்தியன் 2 தீபாவளிக்கும் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

 பரபரக்கும் பனையூர் ஷெட்யூல்

பரபரக்கும் பனையூர் ஷெட்யூல்

இந்தியன் 2 படத்திற்கான ஷூட்டிங் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதன்படி கமல் நடிக்கும் காட்சிகளை மட்டும் ஷங்கர் இயக்கி வருவதாகவும், மற்ற பகுதிகளை செகண்ட் யூனிட் அடிப்படையில் வசந்தபாலன், சிம்புதேவன் ஆகியோர் ஷூட் செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பனையூர் ஷெட்யூலுக்காக ஷங்கர் உட்பட இந்தியன் 2 டீம் பரபரப்பாக உள்ளார்களாம்.

 சீக்கிரமே என்ட் கார்டு

சீக்கிரமே என்ட் கார்டு

இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அடுத்து அ வினோத், மணிரத்னம் ஆகியோரின் படங்களில் நடிக்கவுள்ளார் கமல். அதனால் இந்தியன் 2 ஷூட்டிங் விரைவில் முடிந்துவிடும் என படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் கிடைத்துள்ளன. கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகவுள்ள KH 234 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியாகிவிட்டது. அ வினோத் - கமல் கூட்டணி மட்டுமே இன்னும் உறுதியானதா இல்லையா என தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X