twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடியரசு தினத்தில் ஆன்லைன் விற்பனை... கமலின் கதர் பிசினஸ் அடுத்த அப்டேட்

    |

    சென்னை : நடிகர், இயக்குநர் தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளவர் உலகநாயகன் கமல்ஹாசன்.

    Recommended Video

    BIGG BOSS TRP-ஐ பின்னுக்கு தள்ளிய Sun Tv Serial | Channel TRP, Poove Unakkaga

    அரசியல்வாதியாகவும் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திவரும் கமல், நமது நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் புதிய கதர் பிசினசை துவக்கியுள்ளார்.

    இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பிசினசின் புதிய அப்டேட் குறித்து தெரிவித்துள்ளார்.

    இதுல என்ன எதிர்பாராத திருப்பம்...பிக்பாஸ் ஃபினாலே ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள் இதுல என்ன எதிர்பாராத திருப்பம்...பிக்பாஸ் ஃபினாலே ப்ரோமோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

    உலகநாயகன் கமல்

    உலகநாயகன் கமல்

    உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி அரசியலிலும் தன்னை நிரூபித்து வருகிறார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என்று பன்முகத்திறமையுடன் திரைத்துறையில் நீண்ட நாட்களாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக இருக்கிறார்.

    விக்ரம் படம் தயாரிப்பு

    விக்ரம் படம் தயாரிப்பு

    சமீபத்தில் தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தில் சார்பில் விக்ரம் படத்தை எடுத்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    சிறப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி

    சிறப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி

    இதற்கிடையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் கமல். மேலும் கதர் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அந்த பிசினசையும் துவக்கியுள்ளார். இதற்கென சமீபத்தில் நியூயார்க் சென்று வந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர், சிகிச்சை பெற்று பூரண நலம் பெற்றார். தொடர்ந்து பிக் பாஸ், விக்ரம் பட சூட்டிங் என பிசியாகியுள்ளார். இந்நிலையில் நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் துவங்கப்பட்டுள்ள கதர் பிசினசின் அடுத்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

    குடியரசு தினத்தில் ஆன்லைன் விற்பனை

    குடியரசு தினத்தில் ஆன்லைன் விற்பனை

    வரும் குடியரசு தினத்தையொட்டி இந்த பிசினஸ் ஆன்லைன் விற்பனையை துவக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கதரில் பேஷனை புகுத்தும் வகையில் இந்த புதிய பிசினஸ் துவக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியில் ஏழை நெசவாளர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை என்பதையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நெசவை கொண்டாடுவோம்

    நெசவை கொண்டாடுவோம்

    இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில் இந்த குடியரசு தினத்தை மிகப்பெரிய கொண்டாட்டத்தை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார். மிகச்சிறிய அளவில் நெசவையும் கொண்டாடுவோம் என்றும் தங்களின் புதிய முயற்சியையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் மக்களின் விசாரணைகளுக்கும் அன்பிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

    English summary
    Kamal haasan starts his online business KHHK on Republic day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X