ஆரம்பிக்கலாங்களா...இணையத்தை கலக்கும் கமலின் வித்தியாசமான போட்டோ

சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதே சமயம் சமூக வலைதளங்களிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

கட்சி சார்பான நிகழ்வுகள், நாட்டு நடப்புகள் குறித்து ட்விட்டரில் உடனுக்குடன் கருத்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கமல். தற்போது தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தேர்தலுக்கு தயாராகும் கமல்

தேர்தலுக்கு தயாராகும் கமல்

தீவிர பிரசாரம் ஒரு பக்கம் இருந்தாலும், விருப்ப மனுக்கள் பெறுவது மற்றொரு புறம் படுவேகமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கமல், தங்கள் கட்சியில் பழ.கருப்பையா இணைந்துள்ளதாக அறிவித்ததுடன், அவர் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அறிவித்தார்.

வித்தியாசமான பதிவு

வித்தியாசமான பதிவு

இந்நிலையில் இன்று கமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாங்கள் போருக்கு தயாராகி விட்டோம். எங்களை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி என கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் ஆரம்பிக்கலாங்களா என குறிப்பிட்டு, அத்துடன் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தெருக்கூத்து கலைஞர் வேடத்தில் கமல்

தெருக்கூத்து கலைஞர் வேடத்தில் கமல்

அதில் ராஜா வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர்களை போன்ற உடையில் ஒரு கையில், தனது கட்சி சின்னமான டார்ச் லைட், மற்றொரு கையில் கொடரியுடன் நடந்து வருவது போன்று தோற்றமளிக்கிறார். சாந்தனு ஹசாரிகா ஆர்ட் எனவும் இந்த போட்டோ பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைரலாகும் போட்டோ

வைரலாகும் போட்டோ

இந்த போட்டோ கமல் பதிவிட்ட 13 நிமிடங்களில் சுமார் 6000 பேர் லைக் செய்துள்ளனர். ஏராளமானோர் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டோ பதிவிற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன, இதில் கமல் என்ன சொல்ல வருகிறார் என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X