லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப் போகும் படத்தின் தலைப்பு இதுதானா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கப்போகும் படத்தின் தலைப்பு இதுதான் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது.

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.

இந்தப் படம் செம ஹிட்டானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

பெரும் பட்டாளம்

பெரும் பட்டாளம்

அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, விஜே ரம்யா என ஒரு பெரும் பட்டாளமே நடித்துள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் கொரோனா லாக்டவுன் காரணமாக தள்ளிப் போகிறது.

இன்று அறிவிப்பு

இன்று அறிவிப்பு

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று மாலை தனது அடுத்தப்படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து இவர் வெளியிட்டுள்ள பதிவில், ''எனது அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். நாளை மாலை ஆறு மணிக்கு, இந்த அறிவிப்பு வரும்'' என அவர் கூறியுள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ்

ராஜ்கமல் பிலிம்ஸ்

கடந்த சில மாதங்களாய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை வைத்து இயக்கப்போவதாக தகவல் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் அந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் இயக்கப்போகிறது என்றும் தகவல் பரவியது.

எவனென்று நினைத்தாய்

எவனென்று நினைத்தாய்

இந்நிலையில் தற்போது அந்த படம் கமலை மட்டுமே கொண்டு காட்சியாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு எவனென்று நினைத்தாய் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கமலின் ரசிகர்கள் பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் இதையே தெரிவித்து வருகின்றனர்.

பாடலின் தொடக்க வரி

பாடலின் தொடக்க வரி

இந்த தலைப்பு கமலின் விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற பிரபலமான பாடல் ஒன்றின் தொடக்க வரியாகும். இந்தப் படம் தீவிர அரசியல் த்ரில்லராக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படம் விருமாண்டி படத்தின் இம்ப்ரஷன் என்றும் தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X