»   »  கமலின் அடுத்த படம் கம்யூனிச கதை.. தலைப்பு 'வாம மார்க்கம்'?

கமலின் அடுத்த படம் கம்யூனிச கதை.. தலைப்பு 'வாம மார்க்கம்'?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கமல் தனது அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். இந்தப் படத்தின் கதை கம்யூனிச பாணியில் அமைந்திருக்குமாம். வாம மார்க்கம் என்ற தலைப்பையும் கமல் தேர்வு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

கமல்ஹாசன் ஏற்கனவே ‘விஸ்வரூபம் 2', ‘பாபநாசம்', ‘உத்தமவில்லன்' படங்களை முடித்துவிட்டார். அடுத்தடுத்து வெளியாகவிருக்கின்றன இந்தப் படங்கள்.

முதலில் உத்தம வில்லன்

முதலில் உத்தம வில்லன்

முதலாவதாக ‘உத்தம வில்லன்' படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து ‘பாபநாசம்', ‘விஸ்வரூபம் 2' படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

இன்னும் இரண்டு வெளிப்படங்களில் நடித்த பிறகு, சொந்தப் படத்தை பிரமாண்டமாகத் தொடங்க கமல் திட்டமிட்டுள்ளார். மருதநாயகம் மாதிரி படமாக அது அமையும் என்கிறார்கள்.

வாம மார்க்கம்

வாம மார்க்கம்

அடுத்து அவர் ‘வாம மார்க்கம்' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்தி பரவி உள்ளது. இது கம்யூனிச பாணி கதை. ஏற்கனவே கமல் நடித்த ‘வறுமையின் நிறம் சிவப்பு', ‘அன்பே சிவம்' படங்களில் கம்யூனிச கருத்துக்கள் இடம்பெற்றன.

கமல் ஆசை

கமல் ஆசை

இதுகுறித்து கமலஹாசன் கூறும்போது, ‘மருதநாயகம்' போலவே ‘வாம மார்க்கம்' என்ற பெயரில் படம் எடுக்க வேண்டும் என்பது என் கனவு. வாம என்றால் இடப்பக்கம் என்றும், மார்க்கம் என்றும், மதம் என்றும் அர்த்தமாகும். அரசியல்வாதிகள் இந்த மார்க்கத்தை கம்யூனிசத்துக்கே பயன்படுத்துகிறார்கள்," என்றார்.

English summary
Kamal Hassan is preparing for his next movie after Papanasam and it is tentatively titled as Vaama Maargam.
Please Wait while comments are loading...