பொங்கலுக்கு உத்தம வில்லன் அல்லது பாபநாசம்?

By Shankar

வரும் பொங்கலுக்கு தனது உத்தம வில்லன் அல்லது பாபநாசம் படத்தை வெளியிட கமல் ஹாஸன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமல் நடித்த மூன்று படங்கள் வரிசையாக ரிலீசுக்கு நிற்கின்றன. எப்போதுமே ஒரு படத்தை முடித்து வெளியிட்ட பிறகே அடுத்த படத்துக்குப் போகும் கமல், தன் வழக்கத்துக்கு மாறாக அடுத்தடுத்த படங்களை நடித்துத் தள்ளிவிட்டார்.

விஸ்வரூபம் 2

விஸ்வரூபம் 2

இந்த ஆண்டு அவற்றில் ஏதாவது ஒரு படம் வந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் சில பிரச்சினைகள் காரணமாக விஸ்வரூபம் 2 அப்படியே நிற்கிறது.

உத்தம வில்லன்

உத்தம வில்லன்

உத்தம வில்லன்தான் இந்த மூன்று படங்களில் முதலில் வரும் என்றார்கள். ஆனால் உத்தம வில்லனை வெளியிடத் தோதான தேதி அமையவில்லை. படத்தின் தயாரிப்பாளரான திருப்பதி பிரதர்ஸ் வெளியீட்டைத் தள்ளிப் போடும் சூழலில் உள்ளது.

பாபநாசம்

பாபநாசம்

ஆனால் பொங்கலுக்கே உத்தம வில்லனை கொண்டு வந்துவிடலாம் என கமல் யோசனை கூறியுள்ளார். ஒருவேளை உத்தம வில்லன் பொங்கலுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டால், பாபநாசம் படத்தை வெளியிடுமாறு அதன் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளாராம்.

உற்சாகம்

உற்சாகம்

பொங்கலுக்கு ஐ, என்னை அறிந்தால், ஆம்பள ஆகிய மூன்று படங்கள் ஏற்கெனவே களத்தில் நிற்கின்றன. இந்த நிலையில் கமலின் உத்தம வில்லனும் இணைவது ரசிகர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X