மெர்சல் குழுவை சத்தமில்லாமல் கலாய்த்த கமல் ஹாஸன்!
Recommended Video

நேற்று முழுக்க மீடியாவில் நான்கு படங்கள் வைரலாக வலம் வந்தன. அவை, கமல் ஹாஸன் மெர்சல் படம் பார்த்துவிட்டு, அந்த டீமோடு எடுத்துக் கொண்ட படங்கள்.
படம் பார்த்த கமல் ஹாஸன் என்ன கருத்தைச் சொன்னார்? எந்த மாதிரி பாராட்டினார் என்றெல்லாம் எதுவும் தெரியவில்லை.

ஆனால் விஜய் - அட்லீயோடு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் பின்னணியில் கறுப்பு வெள்ளையில் அபூர்வ சகோதரர்கள் டிஜிட்டல் பேனர் அட்டகாசமாகக் காட்சி அளித்தது.
மெர்சல் படத்தின் கதை அபூர்வ சகோதரர்கள், மூன்று முகம், குடியிருந்த கோயில் போன்ற படங்களிலிருந்து உருவப்பட்டது என்பதை படம் வெளியாவதற்கு முன்பிருந்தே பலரும் கூறி வந்தனர். படம் வெளியானதும் அது உறுதியானது.
இதையெல்லாம் தெரிந்து கொண்ட கமல், மெர்சல் குழு தன் அலுவலகம் வருவதற்கு முன்பாகவே பக்காவாக இந்த டிஜிட்டல் போஸ்டரை ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். மெர்சல் குழுவுக்கு மெர்சல் ஆகிவிட்டதாம் இந்த போஸ்டரைப் பார்த்து. வேறு வழியில்லாமல், அந்த போஸ்டர் பின்னணியில் படமெடுத்துக் கொண்டுள்ளனர்.
பொதுவாக கமலுடன் அவர் அலுவலகத்தில் படமெடுத்துக் கொள்ளும்போது அதன் பின்னணியில் அவர் அப்போதைக்கு நடித்துக் கொண்டிருக்கும் பட போஸ்டர்தான் இருக்கும். சமீபத்தில் படமெடுத்துக் கொண்டவர்களின் பின்னணியில் சபாஷ் நாயுடு போஸ்டர் இருந்ததைக் காணலாம். மெர்சல் குழுவுக்கு மட்டும்தான் இந்த அபூர்வ சகோதரர்கள் ட்ரீட்மெண்டாம்!


Click it and Unblock the Notifications











