இந்த சீசன்லேயும் ஆரம்பிச்சுட்டாரு.. போறப்போக்கில் அரசியல் பேசிய கமல்.. பிக்பாஸ் டீசர கவனீச்சிங்களா?

சென்னை: பிக்பாஸ் சீசன் 4க்கான டீசர் வெளியாகியுள்ள நிலையில் டீசரிலேயே அரசியல் பேசியுள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்கான முதல் டீசர் கடந்த வாரம் வெளியான நிலையில் இரண்டாவது டீசர் நேற்று மாலை வெளியானது.

முழுக்க முழுக்க கொரோனா தடுப்பு வழிமுறைகளை வலியுறுத்தும் பாடலாக இருந்தது இந்த டீசர். டீசரின் இடையில் நடிகர் கமல் தனது க்யூட் எக்ஸ்பிரஷன்களால் ரசிக்க வைத்தார்.

ஆரம்பமான ஆட்டம்

ஆரம்பமான ஆட்டம்

அதே நேரத்தில் இந்த டீசரிலேயே தனது அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் கமல். கடந்த மூன்று எபிசோடுகளையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், பிக்பாஸ் மேடையை ஒரு அரசியல் களமாக பயன்படுத்தி கொண்டார்.

சசிகலா ஷாப்பிங்

சசிகலா ஷாப்பிங்

கடந்த மூன்று சீசன்களிலும் பல்வேறு அரசியல் விஷயங்களை பேசினார். குறிப்பாக முதல் சீசனிலேயே சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா மற்றும் இளவரசி சிறையில் இருந்து வெளியேறி பெங்களூரு நகரில் ஷாப்பிங் செய்ததை பிக்பாஸ் டாஸ்க் மற்றும் பனிஷ்மெண்டுடன் ஒப்பிட்டு பேசினார்.

கமல் கலந்துரையாடல்

கமல் கலந்துரையாடல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி நாட்களில் தோன்றி அந்த வாரம் முழுக்க விஷயங்கள் குறித்து ரிவ்வியூ செய்வார் கமல். ஹவுஸ்மேட்ஸ்களுடன் கலந்துரையாடும் கமல், பாராட்டு, வசை என யார் யாருக்கு என்னென்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கொடுப்பார்.

கொஞ்சம் தூக்கல்

கொஞ்சம் தூக்கல்

அப்போது மக்களுடனும் பேசும் அவர், பிக்பாஸ் மேடையை தனது அரசியல் மேடையாகவும் பயன்படுத்திக்கொள்வார். கடந்த சீசனில் கமலின் அரசியல் பேச்சு கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது. மூன்றாவது சீசனின் முதல் நாளிலேயே பெரியார் குறித்து பேசினார்.

வெளிமாநிலத்தவர் ஆதிக்கம்

வெளிமாநிலத்தவர் ஆதிக்கம்

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவர் அங்கிருந்த தூய்மை பணியாளர்களிடம் இந்தியில் பேசியினார். அப்போது அவர்கள் தமிழ்தான் என்று கூற தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கிடைத்திருக்கிறது என வெளிமாநிலத்தவர் ஆதிக்கம் குறித்து பேசினார்.

தண்ணீர் பிரச்சனை

தண்ணீர் பிரச்சனை

போட்டியாளராக வந்த இலங்கை செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவின் வேண்டுகோளுக்கிணங்க தெனாலி பட டயலாக்கை பேசினார். அதிலும் முழுக்க அரசியல் கலந்திருந்தது. அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தை பார்த்த கமல், மக்கள் வெளியே தண்ணீருக்கு கஷ்டப்படும் போது, தான்தான் குளத்தில் தண்ணீர் விட வேண்டாம் என்று கூறியதாக கூறினார்.

சுபஸ்ரீ மரணம்

சுபஸ்ரீ மரணம்

மேலும் பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரம் தொடர்பாக பேசிய கமல், 30 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு பேனர் வைக்க வேண்டாம், பேனருக்கு பாலாபிஷேகம் வைக்க வேண்டாம் என்று சொன்னதை நினைவு கூர்ந்தார்.

இந்தி திணிப்பு

இந்தி திணிப்பு

தமிழகத்தில் தமிழுக்கு ஆபத்து வரும் நேரத்தில் கீழடி நம் சிறப்பை மீண்டும் எடுத்துரைத்துள்ளது என இந்தி திணிப்புக்கு எதிராய் குரல் கொடுத்தார். மேலும் மழை பெய்யும் நேரத்தில் அதனை சேமிக்க நம்மிடம் போதிய நீர் மேலாண்மை இல்லை என்றும் சாடினார் கமல்.

லாக்டவுனால் கஷ்டம்

லாக்டவுனால் கஷ்டம்

இதுபோல் பல விஷயங்களை பேசி உலக தமிழர்களால் உற்று நோக்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன் அரசியலுக்கு சாதகமாய், சாமார்த்தியமாய் பயன்படுத்தி வருகிறார் கமல். கடந்த வாரம் வெளியான பிக்பாஸ் முதல் டீசரில் லாக்டவுனால் மக்கள் படும் துன்பங்களை பேசினார்.

தட்டிக்கேட்பேன்

தட்டிக்கேட்பேன்

இந்நிலையில் நேற்று வெளியான இரண்டாவது டீசரில் தப்புன்னா தட்டிக்கேட்பேன், நல்லதுன்னா தட்டிக்கொடுப்பேன் என பஞ்ச் வசனம் பேசியுள்ளார். வழக்கமாக ஆளும் கட்சிகளை சாட இந்த டயலாக்கைதான் பேசுவார் கமல். அதையே டீசரிலும் பேசி பிள்ளையார் சுழி போட்டுள்ளார் கமல்.

சந்தேகமில்லை

சந்தேகமில்லை

இம்முறை தேர்தலும் நெருங்குவதால் பிக்பாஸ் மேடையே நிச்சயமாக கமல் தனது கட்சியின் கொள்கைகளை வெளிப்படுத்தும் வகையிலும் பயன்படுத்தி கொள்வார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.. என்னவெல்லாம் வரப்போகிறது என்று...!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X