ஹாலிவுட்டுக்குப் போறது எச்சப் பண்றதுக்காகவா? - கமல் கிண்டல்

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெரிய பொறுப்பை அவரிடம்தான் கொடுத்திருந்தார் கமல்.
அவரோ, கமலைப் புகழ்கிறேன் என்ற பெயரில், விழாவுக்கு வந்தவர்களை நெளிய வைத்துக் கொண்டிருந்தார்.
கமல் பேசி முடித்ததும். அவரிடம் ஒரு கேள்வியை வைத்தார். அது கமலையே நெளிய வைப்பதாக இருந்தது.
''நீங்கள் ஹாலிவுட்டுக்கு போகப்போகிறீர்கள். அங்கு யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? ஜூலியா ராபர்ட்ஸுக்கா, ஏஞ்சலினா ஜோலிக்கா அல்லது வேறு யாருக்கு?'' என்று கேட்டார்.
அதற்கு கமல்ஹாசன், ''அதற்காகவா ஹாலிவுட் போகிறேன்? இங்கிருந்து அங்கபோறது எச்சில் பண்றதுக்காகவா...? முடிந்தால், நல்ல நடிப்பை காட்டலாம் என நினைக்கிறேன்," என்றார் சிரித்தபடி.
Comments


Click it and Unblock the Notifications