இருக்கு.. இன்னைக்கு நிறையா இருக்கு.. மொட்டை அங்கிளையும் இடுப்பழகியையும் தான் வெளுக்க போறாரு பாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கமல்ஹாசன், இரண்டு போட்டியாளர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசியிருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் முதல் புரமோ மொக்கையாய் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

முதல் புரமோவை பார்த்து சோர்ந்து போன ரசிகர்கள் இரண்டாவது புரமோவை பார்த்து எழுந்து உட்கார்ந்துள்ளனர்.

வேடிக்கை பார்க்கிறார்

வேடிக்கை பார்க்கிறார்

இரண்டாவது புரமோவில் தொகுப்பாளரான கமல் பேசியிருப்பதாவது, உப்பு போட்டு சாப்பிடுறவன் எவனும் உள்ளே இருக்க மாட்டான் என்று கூறி, உள்ளேயே இருக்கிறார் ஒருத்தர், தேர்ந்தெடுக்கப்படாமலே தலைவராயிட்டு எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காரு இன்னொருத்தர்.

ஏதாவது செய்ய வேணா?

ஏதாவது செய்ய வேணா?

நாம எப்படி.. வேடிக்கை பார்த்துக்கிட்டே இருக்க போறோமா.. என கேட்டு கிக்காய் ஒரு லுக்கு விடும் கமல், ஏதாவாது செய்ய வேணா.. என தனக்கே உரிய ஸ்டைலில் கேட்டுள்ளார். இந்த புரமோவிலும் கமலின் ரியாக்ஷன், ஸ்மைல், நடை என அத்தனையும் செம கிளாஸியாக உள்ளது.

வெளுக்க போகிறார்

வெளுக்க போகிறார்

இந்த புரமோவின் மூலம் இன்று இரவு நடிகர் கமல்ஹாசன், சுரேஷ் சக்கரவர்த்தியையும் ரம்யா பாண்டியனையும் தான் வெளுத்தெடுக்க போகிறார் என தெரியவந்துள்ளது. குக்கிங் டீமில் உள்ள சுரேஷ் சக்கரவர்த்தி, அந்த டீமில் உள்ள அனிதா வீணாக வம்பிழுத்து வந்ததால் தன்னை டீம் மாற்றும்படி கேட்டார்.

கமலும் அதிர்ச்சி

கமலும் அதிர்ச்சி

தொடர்ந்து, உப்பு போட்டு தின்றவன் எவனும் அந்த டீமில் இருக்க மாட்டார் என பெரிய வார்த்தையை கூறினார். அவர் சொன்ன அந்த ஒரு வார்த்தை ஹவுஸ் மேட்ஸ்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விஷயத்தை நடிகர் கமல் கையில் எடுத்திருப்பதன் மூலம் அவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.

குளிர் காயும் கேப்டன்

குளிர் காயும் கேப்டன்

மேலும் எந்த போட்டியும் இல்லாமல் வந்த முதல் வாரத்திலேயே இடுப்பழகியான ரம்யா பாண்டியனை கேப்டனாக்கிய பிக்பாஸ் அவர் தலையில் கிரீடத்தை தூக்கி வைத்தார். ஆனால் அவர் எதையும் கண்டும் காணாமல் செவ்வனே வேடிக்கை பார்த்து குளிர் காய்ந்து வருகிறார்.

வச்சு செய்யப் போகிறார்

வச்சு செய்யப் போகிறார்

இதையெல்லாம் சேர்த்து வைத்துதான் இன்று கமல் வச்சு செய்யப்போகிறார் என தெரிகிறது. முதல் புரமோ அட போங்கய்யா என சொல்ல வைத்த நிலையில் இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் இன்று எண்டெர்டெய்ன்மென்ட் இருக்கும் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X