கமலின் உத்தம வில்லன் செப் 10-ல் ரிலீஸ்... அப்போ விஸ்வரூபம் 2?

By Shankar

சென்னை: கமல் ஹாசன் இரு வேடங்களில் நடிக்கும் உத்தம வில்லன் படம் வரும் செப்டம்பர் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்பு அவர் இயக்கி நடித்த விஸ்வரூபம் 2 படத்தின் வெளியீடு குறித்து தகவல் ஏதும் இல்லை.

லிங்குசாமி தயாரிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் ஹாசன் 'உத்தம வில்லன்' படத்தில் நடிக்கிறார்.

'விஸ்வரூபம் 2' படத்திற்கு இசை அமைக்கும் ஜிப்ரானே இந்த படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசன் எழுத, ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜாகுமார் மற்றும் ஆண்ட்ரியா ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.

உத்தம வில்லன் படத்தின் இரண்டு கட்டப் படப்பிடிப்பு பெங்களூர் மற்றும் சென்னையில் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அடுத்ததாக மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது.

இதையடுத்து இன்று உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் உத்தம வில்லன் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல் ஹாஸனின் பெரிய பட்ஜெட் படமான விஸ்வரூபம் 2 படம் ரிலீசாவது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த படமான உத்தம வில்லன் ரிலீஸ் பற்றி செய்தி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X