கமலின் நடிப்புத்திறமைக்கு சவால்... 41 ஆண்டுகளை கடந்த வறுமையின் நிறம் சிவப்பு படம்

சென்னை : நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த 1980ல் வெளியான படம் வறுமையின் நிறம் சிவப்பு.

கமலின் நடிப்புக்கு தீனிப் போட்ட படங்களில் பாலசந்தர் இயக்கிய இந்தப் படமும் ஒன்று.

இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 41 ஆண்டுகளை கடந்துள்ளது.

வறுமையின் நிறம் சிவப்பு

வறுமையின் நிறம் சிவப்பு

நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, பிரதாப் போத்தன், எஸ்வி சேகர் என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு. வேலையில்லாத இளைஞன் ரங்கனாக இந்தப் படத்தில் வாழ்ந்திருப்பார் கமல்ஹாசன். அவரை விரும்பும் பெண்ணாக நடித்திருப்பார் ஸ்ரீதேவி.

Recommended Video

Kamal Hassan Biography | கமல்ஹாசன் வாழ்க்கை வரலாறு | Kamalகு இத்தனை காதலியா
வேலையில்லா திண்டாட்டம்

வேலையில்லா திண்டாட்டம்

அவர்களுக்குள் ஏற்படும் பிணக்குகள், அதையொட்டி ஏற்படும் சம்பவங்கள், வேலையில்லாத இளைஞனின் வலி, வேலைக்கான போராட்டம் உள்ளிட்டவற்றை இந்தப் படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பார் கே பாலசந்தர். வேலையில்லாமல் சிரமப்படும் ரங்கனை ஏற்பதா அல்லது பிரதாப் போத்தனுக்கு வாழ்க்கைப்படுவதா என்ற மனப்போராட்டத்தை ஸ்ரீதேவி கேரக்டர் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் டைரக்டர்.

எம்எஸ் விஸ்வநாதன் இசை

எம்எஸ் விஸ்வநாதன் இசை

பிரேமாலயா தயாரிப்பில் எம்எஸ் விஸ்வநாதன் இசையில் படம் சிறப்பான பல விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே, தீர்த்த கரையினிலே உள்ளிட்ட பாடல்கள் இந்தப் படத்தில் சிறப்பான வகையில் பயன்படுத்தப்பட்டிருந்தன. தற்போது வரை ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடல்களாகவும் உள்ளன.

விருப்பத்திற்குரிய பாடல்கள்

விருப்பத்திற்குரிய பாடல்கள்

படத்தில் சிப்பி இருக்குது பாடல் சந்தங்களுடன் மிகவும் சிறப்பான வகையில் அமைந்தது. கண்ணதாசன் வரிகளில் இந்தப் பாடலும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடலாக தற்போதுவரை உள்ளது. 1980களில் பெரிய பிரச்சினையாக இருந்த வேலையில்லா திண்டாட்டத்தை முகத்தில் அறைந்தாற்போல பேசியது இந்தப் படம்.

வேலையில்லாத இளைஞனின் வலி

வேலையில்லாத இளைஞனின் வலி

குடும்ப கதைகளை இயக்கிவந்த பாலசந்தர், சமூக பார்வையில் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். வேலையில்லா திண்டாட்டம் குறித்த இளைஞர்களின் கோபத்தை இந்தப் படம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். வேலையில்லாமல் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்துவரும் கமல், திலீப் மற்றும் எஸ்வி சேகர் ஆகியோரை வைத்து சமூகம் குறித்த தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிக்காட்டினார்.

தீயான வசனங்கள்

தீயான வசனங்கள்

படத்தில் வசனங்களும் தீயாய் இருந்தன. படத்தின் நாயகியாக நடித்திருந்த ஸ்ரீதேவி இந்தப் படத்தில் கொண்டாடப்பட்டார். பிரதாப் போத்தன் கேரக்டர் சிறப்பாக அமைந்திருந்தது. படத்தின் திலீப், எஸ்வி சேகர் உள்ளிட்ட கேரக்டர்களும் அவரவர் நியாயங்களுடன் படைக்கப்பட்டிருந்தன. தற்போது இந்தப் படம் வெளியாகி 41 ஆண்டுகளை கடந்துள்ளது.

தெலுங்கு, இந்தியில் வெளியான படம்

தெலுங்கு, இந்தியில் வெளியான படம்

இந்தப் படம் அகாலி ராஜ்யம் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்தியில் இந்தப் படத்தை கமல் மற்றும் அனிதா ராஜ் நடிப்பில் ஜரா சீ ஜிந்தகி என்ற பெயரில் கே பாலசந்தரே இயக்கியிருந்தார். லாழ்க்கை போராட்டத்தை வெளிக்காட்டிய இந்தப் படம் கே பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான மறக்க முடியாத காவியம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X