ரிலீசுக்கு தயாராகும் விக்ரம்...கமலின் BTS போட்டோவால் குஷியான ரசிகர்கள்

சென்னை : கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்ட BTS போட்டோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் விக்ரம் படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது இறுதியாகி உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் தற்போது சினிமா, பிக்பாஸ் அல்டிமேட், தேர்தல் வேலைகள் என ஒரே சமயத்தில் பல வேலைகளை கவனித்து படு பிஸியாக இருந்து வருகிறார். அடுத்தடுத்த வேலைகளுக்கு நடுவிலும் விக்ரம் படத்தை முடித்து கொடுத்துள்ளார் கமல்.

தயாராகும் கமலின் விக்ரம்

தயாராகும் கமலின் விக்ரம்

கமல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. கமல்ஹாசன், விஜய் சேதபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, விஜே மகேஸ்வரி, சந்தானபாரதி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வாவ்...செம போட்டோ

வாவ்...செம போட்டோ

இடையில் கமலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவர் சிகிச்சையில் இருந்ததால் விக்ரம் படத்தின் ஷுட்டிங் சற்று தாமதமாகின. ஜனவரி மாதம் முதல் மீண்டும் ஷுட்டிங்கில் பங்கேற்று வரும் கமல், இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது கையை கட்டி மிக ஆர்வமாக டைரக்டர் லோகேஷ் கனகராஜ் சொல்லும் சீனை கவனமாக கேட்டுக் கொண்டிருக்கும் பிளாக் அண்ட் ஒயிட் போட்டோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

ஆச்சரியப்படும் ரசிகர்கள்

ஆச்சரியப்படும் ரசிகர்கள்

எவ்வளவு பெரிய நடிகர், மிக சாதாரணமாக டைரக்டர் சொல்வதை ஆர்வமாக கேட்கிறாரா என பாராட்டி கமல் ரசிகர்கள் இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளனர். இந்த BTS போட்டோ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த போட்டோ விக்ரம் இறுதிக்கட்ட ஷுட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை ஷுட்டிங் நிறைவடைந்து விட்டதாக படக்குழு சார்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

ஏப்ரல் ரிலீசுக்கு ரெடி

ஏப்ரல் ரிலீசுக்கு ரெடி

அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் டாப் படங்களில் விக்ரமும் இணைந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் கமல் படம் என்பதால் எதிர்பார்ப்பு மற்ற நடிகர்களின் படங்களை விட சற்று கூடுதலாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X