வாவ்.. இன்னைக்கு ஈவ்னிங் செம ட்ரீட் இருக்கு.. 'விக்ரம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!
சென்னை: கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளது
மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கினார்.
இந்தப் படம் செம ஹிட்டானது. நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்து சாதனை படைத்தது.

பெரும் பட்டாளம்
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, விஜே ரம்யா என ஒரு பெரும் பட்டாளமே நடித்தது.

கமலின் விக்ரம்
கடந்த ஜனவரி படம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்து பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்குகிறார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்
இந்தப் படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் நடிகர் கமலின் 232-வது படம் ஆகும். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இன்று ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தில் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்படத்திற்கான போட்டோ ஷூட் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
இதுகுறித்த அறிவிப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். விக்ரம் படத்தின் டைட்டில் டீசரே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்ற அறிவிப்பு கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முழுக்க க்ரைம் த்ரில்லர்
'விக்ரம்' திரைப்படம் முழுக்க க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகிறது. சென்னையிலேயே ஒரே கட்டமாகப் படப்பிடிப்பை முடித்து, 'இந்தியன் 2' படத்துக்கு முன்பாகவே வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











