விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள்–பத்தல பத்தல...ஆண்டவரின் வேற லெவல் ஆட்டம்
சென்னை : கமலின் தாறுமாறு ஆட்டத்துடன் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமலின் ஆட்டத்தை, கமலின் சொந்த குரலில் பாடிய பாடலை கேட்டு ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்துள்ள படம் விக்ரம், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

மே 15 ல் டிரைலர், ஆடியோ
விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படத்தின் ஆடியோவை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலர் வெளியீட்டை ஃபிரான்ஸ் - கென்ஸ் திரைப்பட விழாவிலும் நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது. தற்போது டிரைலர் மற்றும் ஆடியோவை ஒரே நாளில் மே 15 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அப்டேட்டில் அசத்துறீங்களே
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் வேற லெவலில் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள். படத்தில் De Aging டெக்னாலஜியை பயன்படுத்தி கமலை, 1980 களில் இருந்ததை போல் இளமை தோற்றத்தில் காட்டி உள்ளார்கள் என்ற தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து கமலுக்கு ஜோடியாக பிரபல கன்னட இளம் நடிகை சான்வி ஸ்ரீவட்சவா நடித்துள்ளார். இவர், 10 நிமிடங்களே வரும் பிளாஷ்பேக் சீனில் நடித்துள்ளார் என கூறப்பட்டது. மகள் வயது நடிகையுடன் ஜோடியாக கமல் நடித்துள்ளார் என பரபரப்பாக பேசப்பட்டது.

கமலின் மாஸ் டான்ஸ்
இதற்கிடையில் இந்த படத்தில் கமல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் பாடல் ரேஞ்சிற்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார் என சொல்லப்பட்டது. இளமையான கமல், கமலின் செம மாஸ் டான்ஸ் என ரசிகர்களுக்கு படம் செம ட்ரீட்டாக இருக்க போகிறது என அனைவரும் கூறி வருகின்றனர். அனிருத் இசையில் உருவான இந்த பாடலை கமலே எழுதி, பாடி உள்ளார். பத்தல பத்தல என துவங்கும் இந்த பாடலில் கமலின் செம டான்ஸ் இடம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆண்டவரின் வேற லெவல் ஆட்டம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பு கொஞ்சமும் வீணாகாமல், செம மாஸாக துள்ளல் ஆட்டம் போட வைக்கும் பாடலாக பத்தல பத்தல பாடல் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்ட ஆண்டவா பாடல் ரேஞ்சில் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டதை அடுத்து ட்விட்டரில் #Vikram, #KamalHaasan, #PathalaPathala ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன.

தரலோக்கல் ஆட்டம்
தரலோக்கலாக இறங்கி கமல் குத்தாட்டம் போட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் சிங்கிளின் முழு பாடல் எப்போது வரும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். கமலின் சரியான கம் பேக்காக இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த வயதில் இப்படி கலக்குறாரே என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர். இப்படி ஒரு குத்தாட்டத்தை கடைசியாக வசூல் ராஜா படத்தில் பார்த்தது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











